ஃபார்ச்சூனர் காரெல்லாம் ஓரம் போ! இந்த வண்டி தான் இனி செம கெத்தா இருக்குது!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது டைரோன் என்ற 7 சீட்டர் எஸ்யூவி காரை ஸ்போர்ட்டி ஆர் லைன் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் இந்த 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது தரமான தயாரிப்புகளை நிறுவனம் வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது முழு சைஸ் 7 சீட்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த காருக்கு டைரோன் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இது குறித்த டீசர் வீடியோவை சமீபத்தில் தான் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்த கார் ஏற்கனவே வரும் டிகுவான் ஆன்லைன் காரை விட மேல் உள்ள பொசிஷனில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைரோன் கார் நிறுவனத்தின் பிளாக்ஷிப் காராக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கார் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக், எம்ஜி நிறுவனத்தின் குளோஸ்ட்டர் மற்றும் ஜிப் நிறுவனத்தின் மெரிடியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் டிகுவான் காரின் 7 சீட்டர் வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு முதல் இந்த கார் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. முதலில் சீனா மார்க்கெட்டில் விற்பனையாக இந்த கார் பின்னர் ஐரோப்பா மார்க்கெட்டிற்கு சென்று தற்போது இந்திய மார்க்கெட்டுக்கும் வருகிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4770 மிமீ நீளமும் 2791மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் பயணிகள் அமர்வதற்கு போதுமான இடவசதி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக பூட் வசதிக்காக 345 லிட்டர் அளவு கொண்ட இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் டூயல் பாட் எல்இடி ஹெட் லைட்கள் முழு நீள எல்இடி லைட் ஸ்ட்ரிப் முன்பக்கமும் பின்பக்கமும் ஃபோக்ஸ்வேகன் லோகோ இலுமினேட் செய்யும் அம்சம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. பின்பக்கத்தை பொருத்தவரை கனெக்டெட் லைட் செட்டப் இருக்கிறது. டிகுவான் காரை விட இந்த காரில் லைட்டிங் செட்டப் சற்று வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் பத்தொன்பது இன்ச் அளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் காரை போலவே இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு வரும் இந்த கார் ஆன்லைன் என்ற பேட்டன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது உட்புற கட்டமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம் இந்த காரின் உள்ளே 15 இன்ச் கொண்ட இன்ஃபோடைமென்ட் சிஸ்டம் 10 புள்ளி 25 இன்ச் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் அம்சங்களும் மூன்று ஜோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆம்பியன்ஸ் லைட்டிங் அடாஸ் சிஸ்டம் பிரிமியமான ஹார்மோன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற உள்ளன.
இந்த காரை அந்நிறுவனம் என்ற பிளாட்பார்மில் தயாரிக்கிறது இந்த காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24 ஹெச்பி பவரையும் 320 என்னும் டார்ச் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இன்ஜின் நேரடியாக 7 ஸ்பீடு டி எஸ் ஜி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது இந்த காரில் போக்ஸ் வேக நிறுவனத்தின் போர் மோஷன் ஆல்வின் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் விற்பனையாகிவரும் இந்த காரில் மைல்டு ஹைபிரிட் பிளக்கின் ஹைபிரிட் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் ஆகி ஆப்சன் இருந்தாலும் இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் இந்த கார் முழுமையாக உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அதை இந்தியாவில் கட்டமைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது இதனால் இந்த காரின் விலை 45 முதல் 50 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








