ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்... 150 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு!!

இந்தியாவில் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் (Volkswagen Virtus) காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனித்துவமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கு எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.19.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் தற்போதுள்ள GT Plus Sport என்ற வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்பு பதிப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் வெளிப்புறத் தோற்றம் பார்த்தவுடன் கவரும் வகையில் சில அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக அவோகெடா பியர்ல் என்ற புதிய வண்ணத் தேர்வு இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்படுகிறது. அதனுடன் கருப்பு வண்ணக் கூரை அமைப்பு, கருப்பு அலாய் வீல்கள், கருப்பு ORVM கவர்கள் மற்றும் கருப்பு நிறத்தில் ஃபோக்ஸ்வேகன் லோகோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால், வழக்கமான விர்ட்டுஸ் மாடலை விட இது மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெறுகிறது. இந்த புதிய வண்ணத் தேர்வு இந்த Anniversary Edition மாடலுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், எஞ்சின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை. இதில் 1.5 லிட்டர் TSI EVO டர்போ பெட்ரோல் எஞ்சின் தொடர்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் டீஆக்டிவேஷன் (ACT) என்ற விசேஷ தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 10.1 இன்ச் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி, வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட்டுகள், மழையை உணர்ந்து தானியங்கி முறையில் செயல்படும் ரெயின் சென்சிங் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இந்த காரில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர்களில் காற்றழுத்ததை அறிந்து கொள்வதற்கும், குறைந்தால் எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த Anniversary Edition மாடலில் மிக முக்கிய விஷயமே, இந்த கார் மொத்தமாகவே 150 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்பதால் இது லிமிடெட் எடிஷன் மாடலாக இருக்கும். இதனால், தனித்துவமான விர்ட்டஸ் மாடலை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஃபோக்ஸ்வேகன் இந்த சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விர்ட்டஸ் கார் மாடலானது ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மிட்சைஸ் செடான் பிரிவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த மாடலின் வெற்றியை கொண்டாடும் வகையிலேயே ஆனிவர்சரி எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த புதிய வேரியண்ட் தற்போதைய மாடலின் இறுதி சிறப்பு பதிப்புகளில் ஒன்றாக இருக்கலாம்.

Article Published On: Thursday, August 6, 2026, 10:48 [IST]
English summary
Volkswagen virtus anniversary edition launched price features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out