டிசம்பரில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் கார்... டிசைன், வசதிகளில் மாற்றங்கள்!!

இந்தியாவில் செடான் கார்களுக்கான தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் , ஃபோக்ஸ்வேகன் மற்றும் அதன் அங்கமான ஸ்கோடா நிறுவனங்களின் மிட்சைஸ் செடான் கார்கள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன. அண்மையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்த நிலையில், அதன் ரீபேட்ஜ் மாடலான ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரும் வரும் டிசம்பரில் புதிய மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமான இந்த கார், தற்போது முதல் இடைக்கால அப்டேட்டை பெறவுள்ளது. இதன் அறிமுகம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கோடா ஸ்லாவியா கார் போன்றே வெளிப்புற வடிவமைப்பு, உட்புற வசதிகள் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றில் அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

Volkswagen Virtus

வடிவமைப்பில் புதிய மாற்றங்கள்

புதிய விர்ட்டஸ் காரின் முன்பக்கத்தில் அதிக மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. புதுப்பிக்கப்பட்ட கிரில், நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய வடிவிலான பகல்நேர விளக்குகள் இடம்பெறும். இவற்றை இணைக்கும் எல்இடி லைட் பார் மற்றும் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோ ஆகியவை காரின் தோற்றத்தை மேலும் பிரீமியமாக மாற்றும்.

காரின் முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்க பம்பர்களிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பக்கவாட்டு தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்படும். பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட டெயில் லைட்டுகள், இணைக்கப்பட்ட தோற்றத்தை வழங்கும் எல்இடி விளக்குகள் மற்றும் ஒளிரும் லோகோ ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது.

Also Read

கூடுதல் வசதிகள்

புதிய விர்ட்டஸ் காரின் உட்புறத்தில் முற்றிலும் புதிய வடிவமைப்பு இருக்காது. இருப்பினும், புதிய நிறத்திலான டேஷ்போர்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் இடம்பெறும். தற்போதுள்ள 10.1 இன்ச் தொடுதிரை வசதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுனருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 10.24 இன்ச் அளவிற்கு மேம்படுத்தப்படலாம். மேலும், பின்பக்க இருக்கைகளில் மசாஜ் வசதி, வென்டிலேட்டட் வசதியுடன் முன்பக்க இருக்கைகள், அதற்கு எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

எஞ்சின் விபரம்

புதிய விர்ட்டஸ் காரில் தற்போதுள்ள எஞ்சின் தேர்வுகளே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 115 எச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும். ஆனால், இந்த எஞ்சினுடன் இணைக்கப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் முக்கிய மாற்றம் இடம்பெறுகிறது. தற்போதைய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிற்கு பதிலாக புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திவாய்ந்த எஞ்சின்

விர்ட்டஸ் ஜிடி மாடல்களில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து வழங்கப்படும். இந்த எஞ்சின் 150 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படும். மேலும், பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து இடம்பெறும். சில உயர்தர வேரியண்ட்டுகளில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படும் என தெரிகிறது.

விலை எவ்வளவு இருக்கும்?

தற்போதைய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் கார் ரூ.10.71 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் வசதிகள் இடம்பெறுவதால், விலையில் சிறிதளவு உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய விர்ட்டஸ் களமிறங்கவுள்ளது. டிசம்பரில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய மாடல், செடான் கார் வாங்கத் திட்டமிடுபவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Article Published On: Tuesday, November 3, 2026, 10:45 [IST]
English summary
Volkswagen virtus facelift december 2026 reveal india design features engine price
மேலும்... #volkswagen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out