ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்தியாவில் செடான் (Sedan) கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக, சிறப்பான ஓட்டுதல் அனுபவம், கம்பீரமான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் ஆகியவற்றை விரும்புபவர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் (Volkswagen Virtus) முக்கியமான தேர்வாக இருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத் தோற்றத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விர்ட்டஸ் காருக்கு கிடைத்த முதல் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வடிவமைப்புடன் தயாராகியுள்ள இந்த கார், வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் உட்புற வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Volkswagen Virtus

வடிவமைப்பு மாற்றங்கள்

புதிய விர்ட்டஸ் காரின் முன்பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய வடிவமைப்பிலான முன்பக்க பம்பர் கவனம் ஈர்க்கிறது. இதில் வைர வடிவமைப்பிலான அலங்கார அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பனி விளக்குகளுக்கான பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் முன்பக்கத் தோற்றம் கூடுதல் கம்பீரமாக மாறியுள்ளது.

முன்பக்க கிரில்லில் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிடி (GT) பேட்ஜும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள முகப்பு விளக்குகளே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி பகல்நேர விளக்குகள் (DRL) இடம்பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக முன்பக்கத்தில் புதிய தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

Volkswagen Virtus

இந்த காரின் முக்கியமான புதிய வசதிகளில் ஒன்று 360 டிகிரி கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பக்க பம்பரில் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காரின் வெளிப்புற பின்பக்கக் கண்ணாடிகளிலும் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் குறுகிய இடங்களில் காரை நிறுத்துவதும், போக்குவரத்து நெரிசலில் இயக்குவதும் எளிதாகும்.

ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் விலை உயர்ந்த ஜிடி வேரியண்ட் படங்கள்தான் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் புதிய வடிவமைப்பிலான 16 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க சக்கரங்களில் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்களும் இடம்பெற்றுள்ளன. கதவுகள் மற்றும் பின்பக்கத்தில் சிவப்பு நிற ஜிடி அடையாளங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Also Read

புதிய நீல நிறத்திலான வெளிப்புற வண்ணத்திலும் இந்த கார் காட்சியளிக்கிறது. இதன் மேற்கூரை, பின்பக்கக் கண்ணாடிகள் மற்றும் சிறிய பின்புற ஸ்பாய்லர் ஆகியவை கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பரின் கீழ்ப்பகுதியிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ண அலாய் வீல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தொழில்நுட்ப அம்சங்கள்

காரின் உட்புறத் தோற்றத்தை ஃபோக்ஸ்வேகன் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், டைகுன் காரில் இடம்பெற்றுள்ள சில வசதிகள் விர்ட்டஸ் காரிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

தற்போதைய 10.1 அங்குல தொடுதிரை பொழுதுபோக்கு அமைப்பிலும் புதிய மாற்றங்கள் செய்யப்படலாம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மென்பொருள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், பின்பக்க ஏசி வென்ட்டுகள் மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் அமைப்பும் தொடரலாம்.

Also Read

எஞ்சின் தேர்வுகள்

எஞ்சின் விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் ஸ்கோடா ஸ்லாவியாவில் வழங்கப்பட்டு இருப்பது போன்று, தற்போதைய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 115 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதில் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. அதே எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 150 எச்பி ஆற்றலை வழங்குகிறது. இதனுடன் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொடர்ந்து இடம்பெறலாம். தற்போதைய மாடலில் உள்ள எஞ்சின் தேர்வுகள் பெரும்பாலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் கார் ரூ.10.71 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் வசதிகள் இடம்பெறுவதால் விலை உயர வாய்ப்புள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.11.99 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களுடன் 360 டிகிரி கேமரா போன்ற புதிய வசதிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் களமிறங்க உள்ளது. வரும் டிசம்பர் மாத துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, November 6, 2026, 15:44 [IST]
English summary
Volkswagen virtus facelift december launch exterior design features engine price
மேலும்... #volkswagen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out