ஜெர்மனியின் செந்தேன் மலரே.. வெர்ட்டஸ் செடானுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஃபோக்ஸ்வாகன்

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகனின் பெயர் சொல்லும் கார் வெர்ட்டஸ் (Virtus). இந்த மிட்-சைஸ் ப்ரீமியம் செடான் இந்தியாவில் வெளியாகி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக இந்த வெர்ட்டஸ் செடானுக்கு மட்டும் சில சலுகைகளை அறிவித்துள்ளது ஃபோக்ஸ்வாகன்.

செடான்களின் விற்பனை மிகவும் குறைவாக இருக்கும் இந்த நேரத்திலும், ஒரு மிட்-சைஸ் செடானாக வெர்ட்டஸ் நல்ல விற்பனையையே பதிவு செய்து வருகிறது. குறிப்பாக அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது. மேலும், ஒரு ஜெர்மானிய செடான் காராக வெர்ட்டஸ் மீது வாடிக்கையாளர்கள் தனி மதிப்பைக் கொண்டிருக்கின்றனர்.

Volkswagen Virtus

தற்போது வெர்ட்டஸ் காருக்கு பை நவ் பே லேட்டர் (Buy Now Pay Later), லாயல்டி போனஸ், சிறப்பு ஆண்டுவிழா கொண்டாட்ட சலுகை மற்றும் வெர்ட்டஸ் காருக்கு என பிரத்தியேக சலுகை என நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது. மற்ற செடான்களை விட வெரட்டஸ் ஓரளவுக்கு சிறப்பாக விற்பனையாகி வருவதாலும், ஒட்டுமொத்தமாக செடான் விற்பனையே படுக்கை வசமாக இருக்கும் காரணத்தினாலும் வெர்ட்டஸுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

இவற்றையெல்லாம் கடந்து விநோதமாக மற்றொரு சலுகையையும் இந்த செடான் காருக்கு அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதாவது மருத்துவர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் இந்த வெர்ட்டஸ் செடானை வாங்கும் பட்சத்தில், அவர்களுக்கு மட்டுமேயென சிறப்பு சலுகைகளையும் ஃபோக்ஸ்வாகன் கொடுக்கிறதாம். இந்தத் துறைகளில் இருப்பவர்கள் அதிகம் வெர்ட்டஸ் செடானை வாங்குவதனால் இப்படியொரு சலுகையை அந்நிறுவனம் அறிவித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Volkswagen Virtus

இந்தியாவில் தற்போது மொத்தம் ஒன்பதே ஒன்பது மாஸ் மார்க்கெட் செடான் கார்கள் தான் விற்பனையில் இருக்கின்றன. அதில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1,200 யூனிட்டுகள் விற்பனையுடன் வெர்ட்டஸ் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இருக்கும் மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய மூன்றுமே விலை குறைவான சப்-காம்பேக்ட் செடான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையைக் கொண்டிருந்தும் 2,000 யூனிட்டுகள் என்ற அளவிலேயே ஹோண்டா அமேஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டதில் இருந்து நான்கு ஆண்டுகளில் சுமார் 86,000 வெர்ட்டஸ் செடான் கார்களை ஃபோக்ஸ்வாகன் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஒரு C செக்மென்ட் செடானுக்கு இது நல்ல விற்பனை அளவு தான்.

இந்தக் காரின் விற்பனையை இன்னும் உயர்த்தும் பொருட்டு விரைவில் இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் வெளியிடவுள்ளது ஃபோக்ஸ்வாகன். ஏற்கனவே இந்த அப்டேட் செய்யப்பட்ட காரின் சோதனை இந்திய சாலைகளில் தொடங்கப்பட்டுவிட்டது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு புதிய அம்சங்களுடன் வெர்ட்டஸ் ஃபேஸ்லிப்டை ஃபோக்ஸ்வாகன் மேம்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது இந்த மிட்-சைஸ் செடான் காரை 10.70 லட்சம் ரூபாய் முதல் 19.19 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ஃபோக்ஸ்வாகன். வெர்ட்டஸின் இதயமாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிய இன்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருக்கும் நிலையில், பெரிய இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே பிரத்தியேகமாகக் கொடுக்கப்படுகிறது. ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் 1.0 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுக்குப் பதிலாக 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படும் செடான் காராக ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ் இருந்து வருகிறது. ஒரு ஃபன் டூ டிரைவ் கார், சிறப்பான ஹேண்டிலிங், சிறப்பான இன்ஜினுடன் கிளாஸியான கார் வேண்டும் என்றால் வெர்ட்டஸை கண்டிப்பாக தேர்ந்தெடுக்கலாம். சில லட்சங்கள் கூடுதல் விலை என்றாலும், அதற்கு வொர்த்தான கார் வெர்ட்டஸ்.

Article Published On: Saturday, July 4, 2026, 8:44 [IST]
English summary
Volkswagen virtus gets special discount as its 4 years anniversary celebration in india
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out