ரூ.8 லட்சத்தில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் எஸ்யூவி?... ஸ்கோடா கைலாக் அடிப்படையில் தயாராகிறது!

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கைலாக் எஸ்யூவியின் அடிப்படையில் தயாராகி வரும் இந்த புதிய எஸ்யூவிக்காக ரூ.275 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.

இந்திய சந்தையில் எஸ்யூவி வகை கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக உள்ளது. எவ்வளவு புதிய மாடல்கள் வந்தாலும், சிறப்பான தயாரிப்புகள் சரியான விலையில் வரும்போது இந்தியர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

Volkswagen Tera

(Representative Image)

சப்-4 மீட்டர் எஸ்யூவி

குறிப்பாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி ரக சந்தையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய உள்ளது.

ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் மற்றும் விர்ட்டஸ் ஆகிய கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களைவிட குறைவான பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி மாடலை கொண்டு வர இருப்பது ஃபோக்ஸ்வேகன் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டியாளர்கள்

பரிமாணம், விலை, வசதிகள் போன்ற அனைத்து அம்சங்களிலும் மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இந்த மாடல் நிலைநிறுத்தப்படும். ஸ்கோடா கைலாக் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக இருந்தாலும், இது ரீபேட்ஜ் வெர்ஷனாக இருக்காது.

ஹூண்டாய், கியா நிறுவனங்கள் செய்வது போன்ற அதே பாணியில் தனித்துவமான டிசைன், இன்டீரியர், வசதிகள் மற்றும் விலை நிர்ணயத்துடன் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி உருவாக்கத்திற்காக ரூ.275 கோடியை ஒதுக்கீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

Volkswagen Tera

(Rerpresentative Image)

ஃபோக்ஸ்வேகன் டெராவா?

இந்த புதிய மாடல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், பிரேசில் நாட்டில் ஸ்கோடா கைலாக் அடிப்படையிலான டெரா என்ற எஸ்யூவியை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்து வருகிறது. அதே பெயரில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஸ்கோடா கைலாக் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவியில் கொடுக்கப்படும். இதன்படி, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படலாம். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 116 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இடம்பெறும்.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்?

ஸ்கோடா கைலாக் எஸ்யூவியில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இதற்கு பதிலாக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வரும் 18ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்கோடா ஸ்லாவியா காரில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்கோடா கைலாக் போன்றே இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவியில் பெரிய தொடுதிரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் போன்றவை எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 6 ஏர்பேக்குகள், ஹில்ஹோல்டு அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்க்கும் விலை

ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் இடையிலான விலைப் பட்டியலில் புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மாதத்திற்கு சராசரியாக 1.1 லட்சம் காம்பேக் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இந்தியாவின் மொத்த பயணிகள் வாகன சந்தையில் 30 சதவீதம் அளவுக்கு இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவிகளின் விற்பனை பெற்றிருக்கிறது.

Source: Autocarindia

Article Published On: Friday, August 14, 2026, 13:39 [IST]
English summary
Volkswagen working skoda kylaq based sub 4m suv india
மேலும்... #volkswagen #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out