டாடா பன்ச்சுக்குப் போட்டியாக ஃபோக்ஸ்வாகன் வெளியிடும் புதிய விலை குறைவான எஸ்யூவி இது தான்

மாருதியின் ஹேட்ச்பேக்குகளுக்கு இணையாக இந்திய வாடிக்கையாளர்களால் தற்போது விரும்பப்படும் கார்கள் என்றால் அது சப்-4 மீட்டர், அதாவது சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் தான். ஹேட்ச்பேக்குகளைப் போல இல்லாமல், சப்-காம்பேக்ட் எஸ்யூவியை எந்த நிறுவனம் வெளியிட்டாலும், அது பிடித்திருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். இதனால் நிறைய கியா, டாடா, மாருதி போன்ற நிறைய நிறுவனங்கள் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்தியாவில் பெரியளவில் வெற்றி இல்லாமல் திணறி வந்த ஸ்கோடாவுக்கும், சப்-காம்பேக்ட் பிரிவில் அந்நிறுவனம் வெளியிட்ட கைலாக் எஸ்யூவி கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. மற்ற கார்களை விட ஸ்கோடாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக தற்போது கைலாக்கே இருந்து வருகிறது. கைலாக்கின் அதே ஃபார்முலாவைப் பின்பற்றி ஃபோக்ஸ்வாகன் நிறுவனமும் இந்தியாவில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை வெளியிடவுள்ளது.

Volkswagen Tera

ஃபோக்ஸ்வாகனின் இந்தப் புதிய விலை குறைவான கார் பற்றி கடந்த ஆண்டிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் தான் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் புதிய காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். பிரேசிலில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் டெரா எஸ்யூவியே இந்தியாவிற்கு ஏற்ற வகையில் அளவு குறைக்கப்பட்டு வெளியாகலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இதற்கு முன்னர் அமேயோ மற்றும் போல ஆகிய சப்-காம்பேக்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அவை ஃபோக்ஸ்வாகன் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்திய சந்தைக்காகவே சப்-காம்பேக்ட் கார்களை மாற்றியமைக்க வேண்டிய தேவையும் இருந்தது. இந்தக் காரணங்களினால் சப்-காம்பேக்ட் பிரிவில் இருந்து மொத்தமாக வெளியேறியது ஃபோக்ஸ்வாகன் (ஸ்கோடாவும்).

Volkswagen Tera

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் லைன்-அப்பிலும் மிட்-சைஸ் கார்கள் மற்றும் ப்ரீமியம் கார்கள் மட்டும் தான் இருந்தன. சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்கு இருக்கும் டிமாண்டைப் பார்த்து இந்தியாவிற்கென பிரத்தியேகமாக கைலாக் எஸ்யூவியை வடிவமைத்தது ஸ்கோடா. பலத்த சந்தேகத்துடனே அந்தக் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கிறது.

ஸ்கோடாவின் இந்த முயற்சியைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வாகனும் சப்-காம்பேக்ட் களத்தில் டெரா காரின் மூலம் களமிறங்கவிருக்கிறது. கைலாக் மற்றும் டெரா ஆகிய இரண்டின் கலவையாக புதிய ஃபோக்ஸ்வாகன் சப்-4 மீட்டர் எஸ்யூவி இருக்கும். வசதிகள், பவர்ட்ரெயின் எல்லாம் கைலாக்கைப் போல இருக்கும். டிசைன் டெராவைப் போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்ட்ரெயின் ஒன்று தான் என்பதால், கைலாக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினே புதிய ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவியிலும் இருக்கும். 114 hp பவர் மற்றும் 178 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவான விலையில் தொடங்கி இந்த கைலாக் எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா. தற்போது 7.59 லட்சம் என்ற விலையில் தொடங்கி இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவியும் 8 லட்சம் ரூபாய் என்ற விலையை ஒட்டியோ அல்லது அதற்கும் குறைவான விலையிலோ தான் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக வாடிக்கையாளர்கள் கூடும் கார் பிரிவு என்றாலும், சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு மிகவும் போட்டி நிறைந்த ஒன்றும் கூட. கைலாக் மட்டுமின்றி, நெக்ஸான், பன்ச், பிரெஸ்ஸா, வென்யூ, XYV 3XO எனப் ஒவ்வொரு ரகத்தில் தலைசிறந்த வகையில் இருக்கும் கார் மாடல்களுடன் ஃபோக்ஸ்வாகனின் புதிய கார் போட்டியிட வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ற வகையிலான அம்சங்களை குறைவான விலையில் ஃபோக்ஸ்வாகனால் கொடுக்க முடியுமா?

Article Published On: Monday, June 29, 2026, 8:35 [IST]
English summary
Volkswagens new sub 4 meter suv to be launched in india soon
மேலும்... #volkswagen #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out