4 கார் வித்தா ஒரு கார் இவி தான்! வால்வோக்கு கிடைத்த செம விஷயம்!

ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலை கணிசமாக குறைந்த பிறகும் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை குறையாமல் அதிகரித்து வருவதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் 100 கார்களில் 25 கார்கள் எலெக்ட்ரிக் காரங்களாக உள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

வால்வோ நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து வருகிறது.இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்யும் போது இந்திய வரி விதிப்பு முறையை பின்பற்றுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது.

Volvo EV Sales

இந்நிலையில் வால்வோ நிறுவனம் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் விற்பனை செய்யும் நான்கு கார்களில் ஒரு கார் நிச்சயம் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் மைல்டு ஹைபிரிட் காரர்களுக்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரிமாற்றத்தில் சொகுசு கார் வாங்குபவர்களுக்கான வரி விதிப்பை குழப்பமான நிலையில் இருந்து சிம்பிளாக மாற்றி எளிமையான வரி விதிக்கும் முறைக்கு கொண்டு வந்ததன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் கார்களுக்கான விலை குறைந்த போதும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வால்வோ ஈசி8 காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎம்ஏ பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த காரின் பிரபலம் அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பும் இருக்கிறது. முக்கியமாக எக்ஸ்சி 90 மற்றும் எக்ஸ்சி 60 ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் விற்பனை இரட்டை இலக்க அளவில் வளர்ச்சியை பெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வால்வோ நிறுவனம் இந்த 2026 ஆம் ஆண்டு தனது கார்களின் விலையை அதிகரிக்க போவதாக திட்டமிட்டுள்ளது. கார்களுக்கான தயாரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவு காரணமாக இந்த கார்களின் விலை அதிகமாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் எதிர்பார்த்த அளவை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் இந்தியாவில் அதிகம் செலுத்த துவங்கி விட்டது. இந்நிறுவனம் சிறப்பான அளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருவதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்கள் மத்தியில் மோகம் எவ்வளவு உள்ளது என்பதை காட்டுகிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 12, 2026, 13:45 [IST]
English summary
Volvo ev sales one in four cars electric in india
மேலும்... #volvo #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+