இப்படி நடக்கும்னு நெனச்சு கூட பாக்கல... இனி இந்த வருஷம் முடியற வரைக்கும் காத்திருக்கணும்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று வால்வோ இஎக்ஸ்40 (Volvo EX40). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார் தற்போது வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தற்போது இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்திய சந்தையில் தற்போது வால்வோ நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை வால்வோ இஎக்ஸ்30 (Volvo EX30) மற்றும் வால்வோ இசி40 (Volvo EC40) ஆகியவை ஆகும். வால்வோ நிறுவனம் இஎக்ஸ்40 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, கூடிய விரைவில் அதன் அப்டேட் செய்யப்பட் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Volvo EX30 Side View

அனேகமாக வால்வோ இஎக்ஸ்40 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர வால்வோ இஎக்ஸ்90 (Volvo EX90) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வால்வோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், வால்வோ இஎக்ஸ்30 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 41 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 69 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Volvo EX30

இதன் டிரைவிங் ரேஞ்ச் 480 கிலோ மீட்டர்கள் என வால்வோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிவிடும். 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 28 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

மறுபக்கம் வால்வோ இசி40 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 59 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 78 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 530 கிலோ மீட்டர்கள் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய திறன் வாய்ந்ததாக உள்ளது.

200 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 27 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இது போன்ற காரணங்களால், வால்வோ இஎக்ஸ்30 மற்றும் வால்வோ இசி40 ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வால்வோ இஎக்ஸ்40 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது தற்காலிகமான ஒரு நடவடிக்கைதான். ஏனெனில் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்து விடும்.

Article Published On: Wednesday, June 3, 2026, 14:00 [IST]
English summary
Volvo ex40 electric suv discontinued in india updated version launch soon
மேலும்... #volvo #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out