ரூ.1.26 கோடியில் வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்! 625 கி.மீ ரேஞ்ச், 456 எச்பி திறன்!

இந்தியாவில் சொகுசு கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் இந்த சந்தையில் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், வால்வோ நிறுவனமும் தனது புதிய மின்சார எஸ்யூவியான EX90 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1.26 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்தக் கார், நீண்ட தூரம் பயணிக்கும் திறன், சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் மற்றும் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் வந்துள்ளது.

குடும்பத்துடன் பயணிப்பவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஆறு இருக்கைகள் கொண்ட அமைப்பில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. தனித்தனி கேப்டன் இருக்கைகள், உயர்தர உட்புற வசதிகள், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அம்சங்கள் எனப் பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பெட்ரோல், டீசல் சொகுசு எஸ்யூவிகளுக்கு மாற்றாக மின்சார காரைத் தேர்வு செய்ய விரும்புவோருக்கு EX90 ஒரு முக்கியமான புதிய தேர்வாக அமைகிறது.

Volvo EX90

பவர்ஃபுல் பேட்டரி மற்றும் ரேஞ்ச்

வால்வோ EX90 காரில் 106kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரட்டை மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 456 எச்பி திறனையும், 670 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. அனைத்து சக்கரங்களுக்கும் சக்தியை வழங்கும் ஆல் வீல் டிரைவ் (AWD) அமைப்புடன், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த மின்சார கார் 0-100 கி.மீ வேகத்தை 5.5 விநாடிகளில் எட்டும் திறன் வாய்ந்தது என்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும். WLTP சோதனை முறையில் முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கி.மீ வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ICAT சோதனை முறையின்படி இதன் ரேஞ்ச் 724 கி.மீ எனக் குறிப்பிடப்படுகிறது. இவை வெவ்வேறு சோதனை முறைகளின் முடிவுகள் என்பதால், உண்மையான பயன்பாட்டில் கிடைக்கும் தூரம் மாறுபடலாம். சார்ஜிங் வசதிக்காக 11 kW திறன் கொண்ட ஆன்போர்டு ஏசி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. டிசி ஃபாஸ்ட சார்ஜர் சப்போர்ட் வசதியும் உண்டு.

Also Read

வால்வோ EX90 காரின் கேபினில் 14.5 அங்குல மையத் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 9 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளன. உயர்தர நப்பா லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன்பக்க இருக்கைகள், மசாஜ் வசதி மற்றும் முன்பக்க இருக்கைகளுக்கான வெப்பமூட்டும் வசதி ஆகியவை உள்ளன.

இதில் 25 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bowers & Wilkins ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த திறன் 1,610 வாட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஸோன் ஏர் கண்டிஷனிங், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூடூத் இணைப்பு மற்றும் 5G வசதியும் இடம்பெற்றுள்ளன. ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்டுகள் மூலம் வாகனத்தின் மென்பொருளைப் புதுப்பிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

Volvo EX90

இந்த காரில் உள்ள 6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் இரண்டாவது வரிசையில் தனித்தனி கேப்டன் இருக்கைகள் உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கைகள் குடும்பப் பயணங்களுக்கு கூடுதல் வசதியை வழங்குகின்றன. இருக்கைகள், உட்புற அலங்காரம் மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகியவை நீண்ட தூரப் பயணங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள்

வெளிப்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ரூஃப் ரெயில்கள், உயர்தர LED விளக்குகள், மென்மையாகத் திறந்து மூடும் கதவுகள் மற்றும் 21 அங்குல அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் வால்வோவின் அடையாளமான சுத்தியல் வடிவ LED விளக்கமைப்பு காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. கிரிஸ்டல் ஒயிட், ஓனிக்ஸ் பிளாக், மல்பெரி ரெட், வேப்பர் கிரே, சாண்ட் டியூன் மற்றும் டெனிம் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்களில் பைலட் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் தகவல் அமைப்பு, சந்திப்புகளில் போக்குவரத்து எச்சரிக்கை, தடம் மாறுதல் உதவி, மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ பிரேக்கிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 360 டிகிரி கேமரா, பார்க் பைலட் அசிஸ்ட், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஓட்டுநருக்கான உதவி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Also Read

யாருக்கு ஏற்றது?

ரூ.1.26 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள வால்வோ EX90 எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி கார், அதிக ரேஞ்ச், வலுவான செயல்திறன், ஆறு இருக்கைகள் கொண்ட கேபின் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். வழக்கமான சொகுசு எஸ்யூவியிலிருந்து மின்சார வாகனத்திற்கு மாற விரும்பும் குடும்பங்களுக்கும், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Article Published On: Monday, October 12, 2026, 13:52 [IST]
English summary
Volvo ex90 electric suv launched india price range battery features specifications
மேலும்... #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out