அக்டோபர் 12ல் இந்தியாவில் களமிறங்கும் 2 புதிய Volvo EV-கள்... 600 கி.மீ ரேஞ்ச், அசத்தல் வசதிகள்!

சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான வால்வோ கார் நிறுவனம் தனது வால்வோ இஎக்ஸ்90 எஸ்யூவி மற்றும் இஎஸ்90 சொகுசு செடான் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விலை உயர்ந்த இந்த எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் என்பது விலையை ஒரு பொருட்டாக பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

வால்வோ இஎக்ஸ்90 எலெக்ட்ரிக் எஸ்யூவியும், இஎஸ்90 சொகுசு எலெக்ட்ரிக் செடான் காரும் வரும் அக்டோபர் 12ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு மாடல்களும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளன.

Volvo EX90

வால்வோ நிறுவனத்தின் பிரபலமான XC90 எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய இஎக்ஸ்90 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான எலெக்ட்ரிக் எஸ்யூவி 5,037 மிமீ நீளமும், 1,964 மிமீ அகலமும் மற்றும் 1,744 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல்பேஸ் நீளம் 2,985 மிமீ ஆக இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

வால்வோவின் பாரம்பரியமான சுத்தியலை நினைவூட்டும் (Thor's Hammer) ஹெட்லைட் டிசைன் மாற்றத்துடன் வருகிறது. ஏரோடைனமிக் அலாய் வீல்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் C-வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இதன் முக்கிய வெளிப்புற அம்சங்களாக உள்ளன.

Also Read

உட்புறத்தில் மிக எளிமையாகவும், மாடர்னாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 14.5 அங்குலத்திற்கு செங்குத்து வடிவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது அடுத்து 9 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 13.2 அங்குல திரையுடன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த கார் 6 அல்லது 7 சீட்டர் இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

Volvo ES90

வால்வோ இஎக்ஸ்90 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் சர்வதேச சந்தைகளில் 92kWh மற்றும் 106kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், 92kWh பேட்டரி கொண்ட ரியர் வீல் டிரைவ் மாடல் 333 பிஎச்பி பவரையும் மற்றும் 480 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதன் ரேஞ்ச் 565 கி.மீ. வரை குறிப்பிடப்படுகிறது.

மற்றொரு 106kWh பேட்டரியுடன் வரும் AWD டூயல் மோட்டார் கொண்ட மாடல் அதிகபட்சமாக 680 பிஎச்பி பவரையும் மற்றும் 870 என்எம் டார்க்கையும் வாரி வழங்க வல்லது. இதன் ரேஞ்ச் 600 கி.மீட்டருக்கும் அதிகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளின் பேட்டரி, பவர் மற்றும் அதிகாரப்பூர்வ ரேஞ்ச் விவரங்களை வால்வோ பின்னர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

அக்டோபர் 12ந் தேதி இஎக்ஸ்90 எஸ்யூவியுடன் சேர்த்து இஎஸ்90 என்ற எலெக்ட்ரிக் செடான் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது வால்வோ. இந்தியாவில் 2025ல் நிறுத்தப்பட்ட S90 செடான் காருக்கு மாற்றாக இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பார்க்கப்படுகிறது.

Volvo EX90

இந்த காரில் முழுமையாக பேனல்களால் மூடப்பட்ட முன்பக்க அமைப்பு, புதிய வடிவிலான வால்வோவின் அடையாளமான Thor's Hammer வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள், 22 அங்குல அலாய் சக்கரங்கள், C-வடிவ பின்புற விளக்குகள் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. இந்த காரும் 92kWh மற்றும் 106kWh பேட்டரி ஆப்ஷன்களில் சர்வதேச சந்தைகளில் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் லெவல் 3 ADAS தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, ஆட்டோ பார்க்கிங் வசதி, 5G இணைப்பு, OTA அப்டேட்டுகள், டிஜிட்டல் கீ, வயர்லெஸ் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், போஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன. ஆனால், இவை அனைத்தும் இந்திய மாடலிலும் வழங்கப்படுமா என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

இந்தியாவில் EX90 மற்றும் ES90 ஆகிய இரண்டு கார்களும் ஏற்கனவே உள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரிமீயம் எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும். குறிப்பாக நீண்ட ரேஞ்ச், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகளை ஒருங்கிணைத்து வருவதால், இந்தியாவின் உயர்நிலை எலெக்ட்ரிக் கார் சந்தையில் இந்த இரண்டு கார்களும் முக்கிய தேர்வாக அமையலாம்.

Article Published On: Friday, August 21, 2026, 18:50 [IST]
English summary
Volvo ex90 es90 india launch october 12 range features details
மேலும்... #volvo #india #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X