2 சொகுசு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகும் வால்வோ... அந்த ரெண்டும்தான் வரப்போகுதா?

இந்திய சந்தையில் தற்போது ஐசி இன்ஜின் கார்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகமாக தொடங்கியுள்ளன. குறிப்பாக சொகுசு கார் நிறுவனங்கள், அதிக அளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன. ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இந்த வரிசையில் வால்வோ (Volvo) நிறுவனம் கூடிய விரைவில் 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அவை வால்வோ இஎஸ்90 (Volvo ES90) மற்றும் வால்வோ இஎக்ஸ்90 (Volvo EX90) ஆகிய எலெக்ட்ரிக் கார்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Volvo EX30

இது குறித்து வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா (Jyoti Malhotra) கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வோம் என நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி வால்வோ இஎக்ஸ்30 (Volvo EX30) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டோம்.

இதற்கு அடுத்தபடியாக 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அவை அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் 90 சீரிஸை சேர்ந்தவையாக இருக்கும். இதில் ஒன்று எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாகவும், மற்றொன்று செடான் ரகத்தை சேர்ந்ததாகவும் இருக்கும்'' என்றார்.

Volvo EX30 Side View

இந்திய சந்தையில் வால்வோ விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் வால்வோ இஎஸ்90 எலெக்ட்ரிக் காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும். அதே நேரத்தில் வால்வோ இஎக்ஸ்90 எலெக்ட்ரிக் காரானது எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். அவை இரண்டுமே SPA2 பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில், வால்வோ இஎஸ்90 எலெக்ட்ரிக் காரில், 106 kWh பேட்டரி ஆப்ஷன் (Battery Option) வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 700 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என வால்வோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் வால்வோ இஎக்ஸ்90 எலெக்ட்ரிக் காரில் 111 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 600 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என வால்வோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) மிகவும் சிறப்பானது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. 350 kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், சுமாராக வெறும் 10 நிமிடங்களிலேயே 300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்வதற்கு தேவையான அளவிற்கு இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்து விட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இஎக்ஸ்30 மற்றும் இசி40 என 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிதாக 2 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் வால்வோ நிறுவனத்தின் சந்தை பங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

Article Published On: Saturday, July 11, 2026, 20:22 [IST]
English summary
Volvo to launch 2 new electric cars soon in india
மேலும்... #volvo #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out