34 கி.மீ மைலேஜ், ரூ4.98 லட்சம் விலை!1.94 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் வேகன் ஆர் என்ற கார் தான் கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் காராக உருமாறியுள்ளது. இந்த காரை 2025ம் ஆண்டு 2 லட்சம் பேர் வாங்கியுள்ளார்கள். அப்படி அதிக அளவில் வாங்கும் அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த 2025ம் ஆண்டு விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் வேகன்ஆர் என்ற ஹேட்ச்பேக் செக்மெண்டிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது.

WagonR Sales 2025

கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் இந்த வேகன்ஆர் கார் 1.94 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன இந்த காரில் சிஎன்ஜி வேரியண்ட் கார் வேறு இருக்கிறது. அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இந்த கார் இருக்கிறது. இந்த கார் சிஎன்ஜி வேரியண்டில் ஒரு கிலோ சிஎன்ஜி க்கு 34 கி.மீ வரை மைலேஜ் தரும் காராக இருக்கிறது. மேலும் இந்த காரின் விலையும் குறைவாக இருப்பதால் விரும்பி வாங்கி வருகிறார்கள். ரூபாய் 4.98 என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

கடந்த 2025ம் ஆண்டு எஸ்யூவி செக்மெண்ட் தான் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மொத்தமாக விற்பனையான பயணிகள் காரில் 55.77 குறைந்த விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களும் ஓரளவுக்கு விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்னால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் தற்போது அந்த நிலை மாறி இருந்தாலும் தொடர்ந்து ஹேட்ச்பேக் கார்களுக்கு உள்ள டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. மிடில் கிளாஸ் மக்கள் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள். முக்கியமாக முதல்முறையாக கார் வாங்கும் பலர் விரும்பி வருகின்றனர்.

WagonR Sales 2025

இப்படியாக இந்தியா முழுவதும் ஹேட்ச்பேக் காரில் விற்பனையாகி வரும் நிலையில் அதிகமான கார்களை மாருதி நிறுவனம் தான் விற்பனை செய்துள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் தான் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம் என்றால் குறைந்த விலை, ஃபேமிலியுடன் பயணிக்க இந்த கார் ஏற்ற காராக இருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது, அதுமட்டுமல்லாமல் இந்த காரில் சிறப்பான மைலேஜ் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்த காருக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. மாருதியின் நம்பகத்தன்மை இந்த காருக்கு கிடைக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் இந்த காரை வாங்கி வருகிறார்கள். முக்கியமாக சிறு நகரங்களில் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கிறது. இதனால் ஹேட்ச்பேக் செக்மென்ட் அதிகமாக விற்பனையாகும் காராக இந்த கார்தான் இருக்கிறது.

WagonR Sales 2025

ஆனால் இந்தியா முழுவதும் அதிகமாக விற்பனையாகி வரும் கார் இது கிடையாது. ஆனால் இதை மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் செடான் செக்மென்ட் காராக இருக்கிறது. விற்பனையில் சரிவு ஏற்பட்டு வந்தாலும் இந்த ஒரு கார் நல்ல விற்பனையை பெற்று இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக மாறி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:செடான் கார் விற்பனை குறைவாக இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்களும் விற்பனை குறைவாக இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் இந்த 2026ம் ஆண்டிலும் சிறப்பாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 3, 2026, 12:55 [IST]
English summary
Wagonr sales 2025 number one hatchback india
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X