நிலைமை கை மீறி போயிருச்சு! அவசர அவசரமா பங்க்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்! ஐடி நிறுவனங்கள் முக்கிய முடிவு
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் (Iran-USA-Israel War) காரணமாக, உலகம் முழுவதும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சமையல் எரிவாயு (Cooking Gas) சப்ளையில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போர் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) உற்பத்தி ஆலைகள் மிக கடுமையாக சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து கச்சா எண்ணெய் விலையை ராக்கெட் வேகத்தில் உயர செய்து விட்டன. அத்துடன் மிக முக்கியமான எரிபொருட்களுக்கு தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி விட்டன.

இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கியமான எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னும் பெட்ரோல், டீசல், வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரவில்லை. ஆனால் இந்தியாவில் வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத காரணத்தால், இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மிக கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தியாவில் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், இந்திய மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தற்போது ஒரு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். இதில், எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான வேண்டுகோள் ஆகும். எரிபொருளை சேமிக்க வேண்டும் என்றால், மக்கள் ஒரு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பயன்படுத்துவது, வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) மற்றும் சொந்த வாகனங்களுக்கு பதிலாக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் எரிபொருளை சேமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையில்லாமல் தங்கம் வாங்குவதை தவிர்ப்பது, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் அந்நிய செலாவணியை (Foreign Exchange) சேமிக்க இந்திய மக்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''நாம் ஒரு சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்தாலே, குறிப்பிடத்தக்க அளவு அந்திய செலவாணியை சேமிக்க முடியும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை அளவாக பயன்படுத்துவதுதான் தற்போது நமது தேவையாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை தேவைக்கு ஏற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.
இது இந்தியாவின் அந்திய செலாவணியை சேமிக்க உதவி செய்வதுடன், போரின் தாக்கத்தை குறைக்கவும் உதவி செய்யும். வெளிநாடுகளில் ஒரு பை யூரியா 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் நமது விவசாயிகள் அதை வெறும் 300 ரூபாய்க்கு பெற்று வருகின்றனர்'' என்றார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எரிபொருளை சேமிக்க பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான். எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலமும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலமும், வீட்டில் இருந்தே வேலை செய்வதன் மூலமும் எரிபொருளை நம்மால் கண்டிப்பாக சேமிக்க முடியும்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ஐடி உள்பட பல்வேறு நிறுவனங்களும், நிலைமை சீராகும் வரை, வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பலரும் தற்போது பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications