பென்ஸ் காரை வாங்கும் தொகையில் இத்தனை கார்களை வாங்கலாமா? ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸையும் யோசிக்கனும்!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய 'சிஎல்ஏ எலெக்ட்ரிக்' (CLA Electric) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ஸ் காராக இருப்பினும், இதன் அறிமுகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானதற்கு காரணம், இது இந்தியாவிலேயே விலை குறைவாக பென்ஸ் காராக களமிறக்கப்பட்டுள்ளது. அதுவும், எலெக்ட்ரிக் பென்ஸ் கார் ஆக...
ரூ.55 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் ஏற்கனவே சில எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

பிஒய்டி சீல் (BYD Seal): சீன எலெக்ட்ரிக் காரான இது பெர்ஃபார்மன்ஸ் மிக்க செடான் (Sedan) ரக எலெக்ட்ரிக் காராக விளங்குகிறது. அதாவது அந்த அளவிற்கு, தாழ்வான உடலமைப்பை கொண்ட இந்த எலெக்ட்ரிக் காரில் அதிக எலெக்ட்ரிக் மோட்டார் பவர் கிடைக்கிறது.
இதனால், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 650கிமீ வரையில் ரேஞ்ச் கிடைக்கிறது. அதாவது, இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 650கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ரூ.41 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.53.15 லட்சம் வரையில் செல்கின்றன.

டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y): நீண்ட வருட யோசனைகளுக்கு பின் கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த டெஸ்லா நிறுவனம், முதலாவதாக அறிமுகப்படுத்திய கார் மாடல் ஒய் ஆகும். கிராஸ்ஓவர்-ஸ்டைல் (Crossover-style) உடலமைப்பை கொண்ட டெஸ்லா மாடல் ஒய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.59.89 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
இந்திய சந்தைக்கு அட்வான்ஸான மென்பொருட்கள் மற்றும் சார்ஜிங் வசதிகளுடன் வழங்கப்படும் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் பிரீமியம் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் பிரீமியம் லாங் ரேஞ்ச் ரியர்-வீல்-டிரைவ் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மாடல் ஒய் எல் பிரீமியம் என்கிற அதிக நீளம் கொண்ட வேரியண்ட் சமீபத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5): பழமை மற்றும் புதுமை என இரண்டும் கலந்த கலவையில் இருக்கும் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46.30 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் என்பதால், உட்புறத்தில் நன்கு விசாலமான கேபினை ஐயோனிக் 5 கொண்டுள்ளது.
அத்துடன், இந்த காரிலும் விரைவான சார்ஜிங்கிற்காக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் ரியர்-வீல்-டிரைவ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள ஐயோனிக் 5 காரில் லெவல்-2 அடாஸ் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் போட்டியாக இத்தனை எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் வளர்ச்சி மிக பெரியது என்றே சொல்ல வேண்டும். ஆதலால், ரூ.45 லட்சம் - ரூ.60 லட்சம் விலையில் பலரும் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications