மாருதி ஸ்விஃப்ட் காருக்கு பதிலாக புதிய டாடா காரை வாங்கலாமா? விலையில் பெரிய வித்தியாசம்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் வகை கார்களுள் ஒன்றாக விளங்கும் டியாகோவிற்கு விற்பனையில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் நேரெதிர் போட்டியாக விளங்குகிறது. இந்த இரு பிரபலமான ஹேட்ச்பேக் கார்களுள் எதை வாங்குவது என குழம்புகிறீர்களா? உங்களுக்காக இந்த தொகுப்பில் இந்த இரு கார்களையும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம்.
என்ஜின்: புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வழக்கம்போல் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் கிடைக்கும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

| Specs | Tata Tiago Petrol / CNG | Maruti Swift Petrol / CNG |
| Engine | 1.2L Bi-fuel | 1.2-litre 3-Cyl Z Series |
| Power | 86 PS / 75.5 PS | 82 PS / 69 PS |
| Torque | 113 Nm / 96.5 Nm | 112 Nm / 102 Nm |
| Transmission | 5MT / AMT | 5MT / AMT |
மறுபக்கம், ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இசட்12இ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் 112 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் டியாகோவை போன்று 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸை பெறலாம்.
தொழிற்நுட்ப அம்சங்கள்: புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 10.25-இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை மற்றும் 360-டிகிரி கேமராவை முக்கிய அம்சங்களாக டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது. இவை மட்டுமின்றி, ஓட்டுனரால் பார்க்க முடியாத காரை சுற்றிய பகுதிகளை கண்காணிக்கும் வசதி, பாசிவ் எண்ட்ரீ & பாசிவ் ஸ்டார்ட் (PEPS), டிரைவருக்கு தகவல்களை வழங்க டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும், ஸ்டோரேஜ் உடன் மென்மையான துணியால் மூடப்பட்ட முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், 65 வாட்ஸ் டைப்-சி யுஎஸ்பி சார்ஜர், முழுவதும் ஆட்டோமேட்டிக் ஆக செயல்படக்கூடிய வெப்பநிலை கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி உள்ளிட்டவற்றையும் டியாகோவில் பெறலாம். அதுவே ஸ்விஃப்ட் காரில் டாஷ்போர்டில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், க்ரூஸ் கண்ட்ரோல், சுஸுகியின் கனெக்ட் வசதிகள் உடன் ஸ்மார்ட்பிளே புரோ+, ஃபிஷிக்கலாக டோக்கிள் ஸ்விட்ச்கள் உடன் ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் சார்ஜிங், மல்டிமீடியா கண்ட்ரோல்கள் உடன் லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம், ஏசி துவாரங்களுக்கு புதிய டிசைன், பியானோ கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட கியர்மாற்றிக்கான க்னாப், USB சார்ஜிங் வசதி உள்ளிட்டவையும் ஸ்விஃப்ட் காரில் இடம்பெறுகின்றன.
விலை: டியாகோ மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பெட்ரோல் வெர்சனில் ரூ.4.69 லட்சத்தில் இருந்து ரூ.7.29 லட்சம் வரையிலான விலையிலும், CNG ஆப்ஷனில் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.7.99 லட்சம் வரையிலான விலையிலும் டாடா டியாகோ கிடைக்கிறது.
| Price (Ex-Showroom) | Tata Tiago Petrol | Maruti Swift Petrol | Tiago CNG | Maruti Swift CNG |
| Base Model | Rs 4.69 lakh | Rs 5.79 lakh | Rs 5.79 lakh | Rs 7.45 lakh |
| Top Model | Rs 7.29 lakh | Rs 8.80 lakh | Rs 7.99 lakh | Rs 8.39 lakh |
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆனது பெட்ரோல் வெர்சனில் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.8.80 லட்சம் வரையிலான விலையிலும், CNG ஆப்ஷனில் ரூ.7.45 லட்சத்தில் இருந்து ரூ.8.39 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது. இந்த வகையில் பார்த்தால், டியாகோ ஆனது ஸ்விஃப்ட்டை காட்டிலும் விலை குறைவானதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆனது பிரபலமான ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது. இதனாலேயே சிறந்த பாதுகாப்பான காராக இருப்பினும் டியாகோ கார்களின் விற்பனை ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடுகையில் பெரிய அளவிற்கு இல்லை. ஆனால், புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் டாடா டியாகோ கார்களின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications