இதை எல்லாம் தெரிஞ்சா எலெக்ட்ரிக் காரை வாங்க மாட்டீங்க! ஹைப்ரீட் கார் பக்கம் நிறைய பேர் போறது இதனால்தான்...!!

இந்தியக் குடும்பங்கள் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மீது ஆர்வம் காட்டினாலும், அதிக விலை, போதிய ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியின்மை, மின்தடைகள் போன்ற சவால்களால் தயங்குகின்றன. இதனால், தற்போதைய சூழலில் ஹைப்ரிட் கார்கள் (Hybrid Cars) பாதுகாப்பான தேர்வாகத் தெரிகின்றன. இவை எலெக்ட்ரிக் வாகனங்களின் பலன்களை அளிப்பதோடு, சார்ஜிங் மையங்களையும், தடையில்லா மின்சார விநியோகத்தையும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியதை தவிர்க்கின்றன.

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களுக்கு வாங்கும் காரின் ஆரம்ப விலை முக்கியமானதாக உள்ளது. ஹைப்ரிட் கார்கள் பெட்ரோல் கார்களை விட கூடுதல் விலையிலானவை என்றாலும், எலெக்ட்ரிக் கார்களை விட பெரும்பாலான ஹைப்ரீட் கார்கள் விலை குறைவானவை ஆகும். இந்த விலை வேறுபாடு கட்டுக்குள் இருப்பதால், இந்திய குடும்பங்கள் ஹைப்ரிட் கார்களை விரும்புகின்றன.

why hybrid cars are better than electric cars

வீட்டு உபயோக இவி சார்ஜர்களில் முதலீடு இன்றி, முதல் நாளில் இருந்தே எரிபொருள் சேமிப்பு கிடைப்பது கூடுதல் நன்மை ஆகும். ஹைப்ரிட் கார்களின் மொத்த உரிமையாளர் செலவு தற்சமயம் தெளிவாக உள்ளது. மார்க்கெட்டில் பெரும்பாலான பெட்ரோல்/டீசல் கார்களுக்கான சேவை, உதிரிபாகங்கள் குறித்து மக்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்துள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி ஆயுட்காலம், பேட்டரியை மாற்றுவதற்கான செலவு, காப்பீடு போன்றவை இன்னமும் பலருக்கு சந்தேகங்களை எழுப்புகின்றன.

பெருநகரங்களுக்கு வெளியே பொது இவி சார்ஜிங் மையங்கள் குறைவு. இருக்கும் மையங்களிலும் காத்திருப்பு, பழுதுகள், மெதுவான சார்ஜிங் உள்ளிட்டவை இவி பயனாளர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. பல குடியிருப்புகளில் வீட்டு உபயோக இவி சார்ஜரை பயன்படுத்துவதற்காக மக்கள் பார்க்கிங் இடங்களுக்கு அள்ளாடுகின்றனர். இதனால், வருங்காலங்களில் வீட்டு வசதி சங்கங்களும் கூடுதல் வயரிங் அல்லது அதிக மின்பளு அனுமதியையும், கட்டணங்களையும் எதிர்பார்க்கலாம்.

why hybrid cars are better than electric cars

இது இல்லாமல், இந்தியாவின் பெருநகரங்களுக்கு வெளியே மின்தடைகள் இந்த அச்சத்தை கூட்டுகின்றன. அவசர நேரத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜ் இல்லாமல் இருக்குமோ என வாடிக்கையாளர்கள் கவலைப்படுகின்றனர். மறுப்பக்கம், ஹைப்ரிட் காரை எந்த எரிபொருள் நிலையத்திலும் சில நிமிடங்களில் நிரப்பலாம் என்கிற பாதுகாப்பு உணர்வு அதிகமாக கார்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் வயதான முதிர்ந்த ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை அளிக்கிறது.

இதுமட்டுமின்றி, ஹைப்ரிட் கார்கள் குறைந்த வேகத்தில் மின் சக்தியைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது என்ஜினுக்கு மாறுகின்றன. பள்ளி, சந்தை, அலுவலகம் போன்ற தினசரி பயணங்களில் இவை சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தருகின்றன. இதனால், சார்ஜிங் பயமோ, சிக்கலான திட்டமிடலோ தேவைப்படுவதில்லை. ஹைப்ரிட் கார்கள், வழக்கமான எரிபொருளை நிரப்பி நீண்ட தூரம் பயணிக்க உதவுகின்றன.

why hybrid cars are better than electric cars

இதனால், எலெக்ட்ரிக் வாகன செயலிகளை சரிபார்த்து பதற்றம் கொள்ளாமல், பெட்ரோல் கார்களை விட சிறந்த மைலேஜை ஹைப்ரீட் கார்களில் அனுபவிக்க முடிகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஹைப்ரிட் கார்களுக்கான சேவை மையங்கள், பெட்ரோல் கார் மாடல்களின் சேவை நெட்வொர்க்கைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் சிறிய நகரங்கள், கிராமப்புறங்களிலும் சேவை கிடைக்கிறது.

பல உள்ளூர் மெக்கானிக்குகளும் வழக்கமான கார் என்ஜின்கள், பழக்கமான பாகங்களுடன் பழுதுபார்க்கும் பணியில் வசதியாக உணர்கின்றனர். எலெக்ட்ரிக் வாகன சேவைக்கு பட்டறைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்கள், உபகரணங்கள் குறைவாகவே உள்ளன. பழுதுபார்ப்பதற்காகப் பெரிய நகரங்களுக்கு இழுத்துச் செல்வது தாமதம் ஏற்படுத்துவதுடன், அதிக செலவையும் உண்டாக்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் சுத்தமானவை என்றாலும், இந்தியாவின் மின் உற்பத்தி நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய குடும்பங்கள் நன்மைகளை உணர்ந்தாலும், தற்போதைய வரம்புகளையும் பார்க்கின்றன. ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசின் ஆதரவு உண்டு. எனினும், மக்களின் கொள்கைகள் மாறக்கூடும். சார்ஜிங் நெட்வொர்க்குகள் விரிவடைந்து, மின்சார விநியோகம் மேம்படும் வரை, ஹைப்ரிட் கார்கள் தற்போதைக்கு ஒரு தற்காலிக நடைமுறை தீர்வே. இந்தியக் குடும்பங்களுக்கு தூய்மையான பயணத்தை வழங்கும் இவை, இன்றைய சாலை நிலைமைகள், பயனர்களின் கவலைகளை தீர்ப்பதற்கு சிறப்பாகப் பொருந்துகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2026, 23:10 [IST]
English summary
Why hybrid cars are better than full electric cars right now in india check all reasons here
மேலும்... #electric vehicles #hybrid car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X