நல்ல கார்.. விலையும் கம்மி தான்.. ஆனா யாருமே திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்குறாங்க.. ஏன் தெரியுமா?

அதிகம் விற்பனையாவதற்கு நல்ல சாத்தியக்கூறுகள் உள்ள, ஆனால் அதிகம் விற்பனையாகாத கார்கள் என எடுத்துக் கொண்டால் அதில் முதல் இடம் டாடாவின் ஆல்ட்ராஸுக்குத் தான். குறைவான விலையில் நிறைய இன்ஜின் தேர்வுகளுடன், போதுமான வசதிகளைக் கொண்டிருந்தும், விற்பனையில் ஆல்ட்ராஸ் தடுமாறி வருகிறது. ஆல்ட்ராஸை விட அடிப்படையான டியாகோ கூட இந்தியாவில் ஆல்ட்ராஸை விட நல்ல விற்பனையைப் பதிவு செய்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக ஹூண்டாயின் i20 மற்றும் மாருதியின் ஹேட்ச்பேக்குகள் தான். மிகவும் குறைவாக மூன்றரை லட்சம் ரூபாயில் தொடங்கி, 6 லட்சம் ரூபாய்க்கே ப்ரீமியம் ஹேட்ச்பேக்கையும் மாருதி விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனை செய்யும் கார்களில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது மாருதியின் ஹேட்ச்பேக்குகள் தான்.

Tata Altroz

அதனைத் தொடர்ந்து ஹூண்டாய் i20, டாடா டியாகோ, மாருதி ஹேட்ச்பேக்கின் மற்றொரு வடிவமான டொயோட்டா கிளான்ஸா, மாருதி செலரியோ, ஹூண்டாயின் விலை குறைவான i10 நியாஸ் ஆகிய கார்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 3,000 யூனிட்டுகளுக்கும் கீழான விற்பனையைப் பதிவு செய்து 11வது இடத்தில் இருக்கிறது டாடா ஆல்ட்ராஸ்.

உண்மையில் பரிதாபகரமான ஒரு நிலை தான். ஏனெனில் ஆல்ட்ராஸுக்கு அடுத்த இடங்களில் எம்ஜி, சிட்ரன் மற்றும் ரெனோவின் ஹேட்ச்பேக்குகள் மட்டுமே உள்ளன. அந்த வகையில் ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனையின் அடிமட்டத்தில் இருக்கிறது டாடா ஆல்ட்ராஸ். இத்தனைக்கும் இந்தக் காரில் நிறைய இன்ஜின் தேர்வுகளை டாடா கொடுத்துள்ளது.

Tata Altroz

NA பெட்ரோல், NA பெட்ரோல் + CNG, டீசல் என மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஆல்ட்ராஸ் ரேஸர் மாடலில் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் கூட டாடா மோட்டார்ஸ் கொடுத்தது. ஆனால் குறைவான விற்பனை காரணமாக 2025ம் ஆண்டு ஃபேஸ்லிப்டிற்கு முன்பாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

டாடா லைன்-அப்பில் EV வடிவில் இல்லாத ஒரே கார் ஆல்ட்ராஸ் மட்டும் தான். சஃபாரிக்கும் இல்லைதான், ஆனால் விரைவில் சஃபாரி EV வெளியாகவிருக்கிறது. ஆல்ட்ராஸுக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், வேறு எந்த ஹேட்ச்பேக்கும் கொண்டிராத ஒரு விஷயத்தை ஆல்ட்ராஸ் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே டீசல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரே மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் கார் டாடா ஆல்ட்ராஸ் தான்.

ஆனால் அது மட்டும் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை அதிகம் விற்பனை செய்வதற்கு தேவையான விஷயமாக இல்லை. இந்த இடத்தில் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களைப் பற்றி பட்ஜெட் வாடிக்கையாளர்கள் கவலைப்படவில்லை என்பதே பொருள். இல்லையென்றால் மாருதியின் ஹேட்ச்பேக்குகள் விற்பனையில் உச்சத்தில் இருக்காது. ஆல்ட்ராஸின் விற்பனையை உயர்த்த அனைத்து வகைகளிலும் முயற்சி செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

தற்போது இந்த டாடா ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரானது 6.89 லட்சம் ரூபாய் முதல் 11.49 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT மற்றும் 6 ஸ்பீடு DCA என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களையும், CNG-யுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் டாடா கொடுத்துள்ளது. டீசல் இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் மாருதி ஹேட்ச்பேக்குகளுக்கு எதிராக ஆல்ட்ராஸ் விற்பனையில் திணறுவதில் தவறில்லை. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே அந்த இடத்தில் திணறித்தான் போயுள்ளன. ஆனால் ஆல்ட்ராஸ் அளவிற்கு மோசமான இடத்தில் வேறு எந்த ஹேட்ச்பேக் காரும் இல்லை. விரைவில் இதன் விற்பனையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் ஏதாவது புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

Article Published On: Thursday, June 25, 2026, 16:13 [IST]
English summary
Why tata altroz hatchback failing in sales in india what could be the reason
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out