இந்த 6 எஸ்யூவி கார்களை விட்டால் பெஸ்ட் ஆப்ஷன் பெருசா எதுவும் இல்ல! இலட்சக்கணக்கில் பணத்தை கொட்டாமல் வாங்கலாம்!

நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் மற்றும் அதிக உட்புற இடவசதிக்காக எஸ்யூவி (SUV) வகை கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனாலேயே இன்றைய காலக்கட்டத்தில் சாலைகளில் அதிகளவில் எஸ்யூவி கார்களை பார்க்க முடிகிறது. இதற்கேற்ப கார் நிறுவனங்களும் புது, புது எஸ்யூவி கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.

மேலும், பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் விதமாக எஸ்யூவி கார்களை பல்வேறு விதமான விலைகளில் விற்பனை செய்கின்றன. இதனால், சில எஸ்யூவி கார் மாடல்களில் குறைந்த விலையிலான ஆரம்ப நிலை (Entry-level) வேரியண்ட்களில் கூட சிறப்பான வசதிகள் மற்றும் அம்சங்கள் கிடைக்கின்றன. அத்தகைய எஸ்யூவி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

suv cars base variant with premium features

ஹூண்டாய் வென்யூ எச்.எக்ஸ்2 (Hyundai Venue HX2): ஹூண்டாயின் அளவில் சிறியதான சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) வகையை சேர்ந்த காரான வென்யூவின் எச்.எக்ஸ்2 வேரியண்ட் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. வென்யூவின் இந்த வேரியண்ட்டில் டாஷ்போர்டில் இரு திரைகள் மற்றும் முன் & பின்பக்க ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் டஸ்டர் அதென்டிக் (Renault Duster Authentic): சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும் அதென்டிக் வேரியண்ட்டில் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அத்துடன், எல்இடி விளக்குகள், 17-இன்ச் ஸ்டீல் சக்கரங்கள், 7-இன்ச் டிரைவர் டிஸ்பிளே மற்றும் அனைத்து நான்கு கதவுகளிலும் பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

suv cars base variant with premium features

கியா செல்டோஸ் எச்.டி.இ (Kia Seltos HTE): செல்டோஸின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. மேலும், விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், பின்பக்கத்தில் ஸ்பாய்லர், 12-இன்ச் எல்சிடி க்ளஸ்ட்டர் திரை, 10.24 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எம்.எக்ஸ் (Mahindra XUV700 MX): இந்தியாவில் அதிக பேர் வாங்கும் அளவில் சற்று பெரியதான மிட்-சைஸ் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700-இன் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 200 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா குஷாக் கிளாசிக்+ (Skoda Kushaq Classic+): ஸ்கோடா குஷாக் காரின் கிளாசிக்+ ஆனது இந்திய கார்கள் சந்தையில் வசதிகள் நிறைந்த ஆரம்ப நிலை எண்ட்ரி-லெவல் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் 1 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்டவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கம்ஃபர்ட்லைன் (Volkswagen Taigun Comfortline): ஸ்கோடா குஷாக் கிளாசிக்+ வேரியண்ட்டை போன்று டைகுனிலும் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான கம்ஃபர்ட்லைனில் எல்இடி விளக்குகள், அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட சவுகரியமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டில் 1 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி கார்கள் சாலையில் செல்லும் அழகே தனி. இதனாலேயே எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் வாங்கினாலும் எஸ்யூவி கார்கள் இயங்கும்போது அழகாக தெரிகின்றன. அத்தகைய எஸ்யூவி கார்களின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களை இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இதில் உங்களது தேர்வு எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Saturday, April 25, 2026, 23:51 [IST]
English summary
Why these six suv cars prove you dont need to spend extra for premium features
மேலும்... #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+