செல்போன் தயாரிச்ச கம்பெனியை நம்பி 4.1 லட்சம் பேர் இந்த இவி காரை வாங்கிட்டாங்க!

ஷாவ்மி நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு உலக அளவில் 4.10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முக்கியமான சாதனையை படைத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தாண்டி அதிகபட்ச விற்பனையாக இருக்கிறது. இந்த அதிக விற்பனைக்கு பிறகு 2026ம் ஆண்டு மொத்தம் 5.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயத்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஷாவ்மி நிறுவனம் இந்த உலகிற்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக பிரபலமானது. தற்போது இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரித்து வருகிறது. இந்நிறவனம் கடந்த 2025ம் ஆண்டு எலெக்ட்ரிக் கார் விற்பவவனையில் மிகப்பெரிய சாதனையைபடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Xiaomi 2025 Report

இது குறித்து அவர் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 2025ம் ஆண்டு அந்நிறுவனம் மொத்தம் 4.10 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இந்நிறுவனம்50,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் டிசம்பர் மாதத்தில்தான் 4 லட்சம் மைல் கல்லை தாண்டியதாக அறிவித்திருந்தது.

கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 3,61,625 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இது 4.10 லட்சமாக உயர்ந்துள்ளது. ஷாவ்மி நிறுவனம் தனது முதல் காராக எஸ்யூ7 என்ற எலெக்ட்ரிக் செடான் காரை கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் ஒய்யூ7 என்ற எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் எல்லாம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள் ஆகும்.

Xiaomi 2025 Report

அதன்பின்னர் இந்நிறுவனம் எஸ்யூ 7 அல்ட்ரா என்ற அதிக பெர்ஃபார்மென்ஸ் நிறைந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்நிறுவனம் சீன மார்கெட்டில் மட்டுமே தற்போது வாகனங்களைவிற்பனவை செய்கிறது. அதிகாரப்பூர்வமாக மாற்ற நாடுகளுக்கு தனது வர்த்தகத்தை விரிவாக்கவில்லை.

ஷாவ்மி நிறுவனம் இந்த 2025ம் ஆண்டு 3 லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு வைத்திருபந்தது. பின்னர் இது கடந்த மார்ச் மாதம் 3.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் அந்நிறுவனம் நிர்ணயம் செய்த டார்கெட்டை விட அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு 5.50 லட்சம் கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அந்நிறுவனம் தனது தயாரிப்பில் இருக்கும் டிமாண்ட் மற்றும் தரம் மீதான நம்பிக்கையில் இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிறுவனம் 2027ம் ஆண்டு ஐரோப்பிய மார்கெட் உள்ளே களம் இறங்கப்போகிறது. இது மட்டுமல்ல இந்த 2026ம் ஆண்டு இந்நிறவனம் ஒய்யூ9 என்ற எஸ்யூவி காரை களம் இறக்குகிறது. இந்நிறுவனம் இந்த காரை 6 மற்றும் 7 சீட்டர் கொண்ட ஆப்ஷன் உடன் உருவாக்குகிறது. இது போக ஒய்யூ7 அல்ட்ரா, மற்றும் ஒய்யூ 7 ஜிடி ஆகிய கார்களையும் களம் இறக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஷாவ்மி நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் இல்லை. இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார்கள் விரைவில் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தியர்கள் ரசிக்கும் வகையில் தான் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 4, 2026, 18:30 [IST]
English summary
Xiaomi 2025 report 410000 car sales full details
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X