உலகையே திரும்பி பார்க்க வைத்த அம்பாஸிடரின் வாரிசு! 34 கிமீ மைலேஜ்! ஆனா அடிமாட்டு விலையில் விக்கறாங்க!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி ரக கார்களின் (SUV Cars) மீது திரும்பியிருப்பதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருப்பதால், கார் நிறுவனங்களும் கூட, எஸ்யூவி ரக கார்களின் அறிமுகத்திற்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன.

இந்திய கார் சந்தையில் தற்போது எஸ்யூவிக்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலையில் எஸ்யூவி ரக கார்களின் சந்தை பங்கு 52 சதவீதமாக உள்ளது. அதாவது இங்கு 100 கார்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதில் 52 கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை என தரவுகள் தெரிவிக்கின்றன.

Maruti Suzuki Dzire Airbags

மறுபக்கம் செடான் ரக கார்களின் சந்தை பங்கு, 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் ஒரே ஒரு செடான் ரக கார் மட்டும், எஸ்யூவி ரக கார்களுக்கே சவால் விடும் வகையில், மிகவும் சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.

2025ம் ஆண்டு முடிவடைந்து, 2026ம் ஆண்டில் தற்போது நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில், கடந்த 2025ம் ஆண்டுக்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது.

Maruti Suzuki Dzire

இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டில், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார் என்ற பெருமையை, டிசையர் தட்டி சென்றுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அளவில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக இந்திய அளவிலும், கடந்த 2025ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் சொந்தமாக்கியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற பிரபலமான எஸ்யூவி ரக கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் (India's Best-Selling Car In 2025) என்ற பெருமையை, மாருதி சுஸுகி டிசையர் தட்டி சென்றுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2.14 லட்சம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில், அதாவது கடந்த 2024ம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக வெறும் 1.61 லட்சம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த 2025ம் ஆண்டில், 53 ஆயிரம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு 2 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

இதுவே இந்த வளர்ச்சிக்கு முதல் காரணமாக கருதப்படுகிறது. மறுபக்கம், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி (GST) குறைக்கப்பட்டது, 2வது காரணமாக பார்க்கப்படுகிறது. இவற்றுடன் மாருதி சுஸுகி டிசையர் விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது ஆகியவையும், இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களாகதான் கருதப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மறுபக்கம் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன. இந்த விலை மற்றும் மைலேஜ் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால்தான், செடான் ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், எஸ்யூவி ரக கார்களுக்கு சவால் அளிக்கும் வகையில், மாருதி சுஸுகி டிசையர் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் இதன் பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), வாடிக்கையாளர்களை கவர கூடிய முக்கியமான விஷயமாக உள்ளன.

அதாவது குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், மாருதி சுஸுகி டிசையர் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களிலேயே, மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் டிசையர் கருதப்படுகிறது.

மாருதி சுஸுகி டிசையர், கடந்த 2008ம் ஆண்டில்தான், இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே, 30 லட்சம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 32.14 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு பிறகு, இந்தியா கண்ட மிகவும் வெற்றிகரமான செடான் ரக கார்களில் ஒன்று என மாருதி சுஸுகி டிசையரை குறிப்பிடலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 2, 2026, 14:25 [IST]
English summary
Year ender 2025 indias best selling car in 2025 maruti suzuki dzire
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+