27 வருஷம் பழைய மஹிந்திரா வாகனம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க... இப்போதும் ஷோரூம் கண்டிஷனில்!!

மஹிந்திரா (Mahindra) கடந்த காலங்களில் இருந்து பல்வேறு தரமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அவ்வாறான தரமான மஹிந்திரா வாகனங்களுள் ஒன்றுதான், மார்ஷல் (Marshal) ஆகும். 1980, 90ஆம் காலக்கட்டங்களில் பயன்பாட்டில் இருந்த மார்ஷல் வாகனங்களுள் பெரும்பாலானவை தற்சமயம் இல்லை என்றாலும், இங்கு ஒரு மஹிந்திரா மார்ஷல் வாகனம் பட்டி, டிங்கரிங் பார்த்து ஷோரூமில் இருந்து இப்போதுதான் வெளியே எடுத்ததுபோல் பளபளப்பான தோற்றத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மாநகரங்களில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்றாலும், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் 1980, 90ஆம் காலக்கட்டத்தில் பரவலாக மஹிந்திரா மார்ஷல் வாகனம் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, கேரளாவில் இந்த மஹிந்திரா வாகனத்தை நிறைய பேர் விரும்பி பயன்படுத்தினர். ஆனால், தற்போது பிராண்ட்-நியூ தோற்றத்தில் காட்சியளிக்கும் மார்ஷல் வாகனம் கர்நாடகா மாநில நம்பர் பிளேட்டை கொண்டுள்ளது.

mahindra marshal restored in kerala

30, 40 வருடங்களுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த மார்ஷல் வாகனங்களுள் பெரும்பாலானவை ஏற்கனவே ஸ்க்ராப் (Scrap) செய்யப்பட்டுவிட்டன. சில மார்ஷல் வாகனங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட ஓனர்கள் பயன்படுத்தி கடைசியில் பழைய இரும்பு கடைக்கு வந்துவிட்டன. இருப்பினும், இந்த ஒரு மார்ஷல் வாகனம் இப்போதும் பளபளப்பான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதற்கு காரணம், இந்த வாகனத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு வேலைகள் ஆகும்.

அதுமட்டுமின்றி, தற்போது இந்த வாகனத்தை கேரளாவை சேர்ந்த மெக்கானிக் நிறுவனம் ஒன்று முழுவதுமாக வேலை பார்த்து இந்த நிலைக்கு மாற்றியுள்ளது. 1980களில் விற்பனையில் இருந்த மார்ஷல் வாகனத்தின் பாகங்களை இப்போது பெறுவது முடியாத காரியம் ஆகும். ஆதலால், மஹிந்திரா தார் வாகனத்தின் பாகங்களை பெற்று இதில் பொருத்தி உள்ளனர்.

mahindra marshal restored in kerala

இதனால்தான், இந்த வாகனம் பார்ப்பதற்கு கொஞ்சம் தாரின் சாயலில் தெரிகிறது. இந்த மார்ஷல் வாகனத்தில் என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கும் வீடியோவில், வாகனத்தின் மெட்டல் பாடியில் இருந்து என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது விளக்கி கூறப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வழங்கப்பட்டுள்ள நிறைய பாகங்களை பிரத்யேகமாக உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், காருக்குள் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் என முக்கியமான பகுதிகளை இரும்பு தகடுகளை கொண்டு உருவாக்கி உள்ளனர். வாகனத்தின் பின் வரிசை இருக்கைகளை மெக்கானிக் ஷாப்பில் ஒருவர் பொருத்துவதையும் வீடியோவில் காணலாம். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்த பின் வாகனம் பெயிண்ட் ஷாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு, அடர் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

mahindra marshal restored in kerala

அத்துடன், வாகனத்தின் சக்கரங்களுக்கும் கருப்பு மற்றும் சில்வர் நிறத்தில் பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதே சில்வர் நிறம் வாகனத்தின் முன்பக்கத்தில் கிரில் பகுதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட நம்மை வசீகரிப்பது என்னவென்றால், வாகனத்தின் பொனெட் மீது தடிமனான எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள 'Mahindra' லோகோ ஆகும். இந்த குறிப்பிட்ட மார்ஷல் வாகனம் ஆனது 1998இல் உருவாக்கப்பட்டது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது உள்ள இளம் தலைமுறையினர் பலருக்கு மஹிந்திரா மார்ஷல் என்கிற ஒரு வாகனம் இருந்ததே தெரியாது. அப்படியிருக்கையில், அவர்கள் இந்த வாகனத்தை நேரில் பார்த்திருப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவே. அப்படியிருந்தும், கர்நாடகாவில் ஒருவர் பழைய மார்ஷல் வாகனத்தை இப்போதும் பயன்படுத்துகிறார் என்றால், நிச்சயமாக அவர் பழமையான கிளாசிக் கார்கள் மீது ஆரவம் கொண்டவராகவே இருப்பார்.

More from DriveSpark

Article Published On: Monday, January 6, 2025, 14:34 [IST]
English summary
1980s mahindra marshal restored to beautiful look in kerala
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X