இந்தியர்கள் விரும்பி வாங்கும் ஹூண்டாய் காரின் எலெக்ட்ரிக் ஆயில் பம்ப்பில் பிரச்னை.. இலவசமா மாற்றி தர அழைப்பு!
இந்தியர்களால் அதிகம் வாங்கப்படும் கார் மாடல்களில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta)-வும் ஒன்று ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கே ஹூண்டாய் அழைப்பு விடுத்திருக்கின்றது. அதேவேளையில், இந்த அழைப்பு அனைத்து கிரெட்டாவிற்குமானது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.
கிரெட்டா ஐவிடி (Creta IVT) மாடல்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு பொருந்தும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இதிலேயே உற்பத்தி கோளாறு இருப்பதை ஹூண்டாய் நிறுவனம் தற்போது கண்டறித்து இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது அழைப்பும் விடுக்கப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலர் (Electronic Oil Pump Controller)-லேயே பிரச்னை இருப்பதை ஹூண்டாய் கண்டறிந்திருக்கின்றது.

ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கு முந்தைய இரண்டாம் தலைமுறை கிரெட்டா ஐவிடி-யே இந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றது. ஆகையால், இப்போதைய அழைப்பு இரண்டாம் தலைமுறை கிரெட்டாவிற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டீலர்களும் அவர்கள் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களைத் தொடர்புக் கொண்டு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இத்துடன், ஹூண்டாய் நிறுவனமும் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பாதிக்கப்பட்ட கார் மாடல்களின் விஐஎன் (Vehicle Identification Number)-களை வெளியிட்டு இருக்கின்றது. எனவே ஹூண்டாய் கிரெட்டா கார் உரிமையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் கிரெட்டா ஐவிடி-க்கு இந்த அழைப்பு பொருந்துமா என்பதை அங்கு பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், நேரடியாக சர்வீஸ் மையம் சென்றும் உங்களுடைய கிரெட்டா ஐவிடிக்கு இந்த அழைப்பு பொருந்துமா என்பதை பார்த்துக் கொள்ளலாம். அழைப்பின்கீழ் அந்த காரின் எலெக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோல்லர்கள் முழுமையாக ஆராயப்பட இருக்கின்றது. அப்போது சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பாகம் மாற்றப்பட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட இருக்கின்றது.
இந்த சேவையை கட்டணம் ஏதுமின்றியே ஹூண்டாய் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எத்தனை எண்ணிக்கையிலான கிரெட்டா ஐவிடி பாதிப்பில் சிக்கியிருக்கின்றது என்கிற துள்ளியமான நம்பரை ஹூண்டாய் வெளியிடவில்லை. ஒரு சில ஆயிரம் யூனிட் இந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் என்று கணிக்க முடிகின்றது.
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி இருக்கின்றது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்கிற வீதத்தில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே சமீபத்தில் இந்த கார் மாடலின் என் லைன் (Creta N Line) வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, ஹூண்டாய்.
என்8 (N10) மற்றும் என்10 (N10) ஆகிய இரண்டு விதமான தேர்வுகளில் கிரெட்டா என் லைன் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இரண்டிலும் 1.5 லிட்டர் டி-ஜிடிஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இத்துடன், 6 எம்டி (6MT) மற்றும் 7 டிசிடி (7DCT) ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கிரெட்டா என் லைனில் வழங்கப்படுகின்றன. ரூ. 16.82 லட்சம் தொடங்கி ரூ. 19.34 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை அதிகமாக்கும் நோக்கிலேயே கிரெட்டா என் லைன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதைப் போலவே விரைவில் இந்த கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக நாடுகளில் ஏற்கனவே இதன் மின்சார வெர்ஷனின் சோதனையோட்டம் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








