விஜய் கூட சிஎம் ஆகிடுவாரு போல... ஆனால் இந்த மஹிந்திரா காரை கைக்கு பெற முடியாது போலயே!!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக உள்ளது. கரடு, முரடான பாதைகள் மற்றும் ஏற்றம், இறக்கமான மலைப்பாதைகளில் செல்வோரின் முதன்மையான சாய்ஸாக தார் உள்ளது. அதுமட்டுமின்றி, சமீப காலமாக இவ்வாறான ஆஃப்-ரோடு வாகனங்களை சாதாரணமான சாலைகளில் பயன்படுத்துவதும் டிரெண்டாகி வருவதால், குறிப்பாக தார் வாகனத்தை நிறைய பேர் வாங்குகின்றனர். இதனால், இந்த வாகனத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய போராடும் மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் வாகனத்தை புக் செய்த கஸ்டமர் ஒருவருக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் மாருதி சுஸுகி ஜிப்ஸி இருந்த இடத்தில் தற்சமயம் மஹிந்திரா தார் உள்ளது. 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் வாகனம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் வரையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 மஹிந்திரா தார் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

mahindra thar roxx waiting period

இதற்கு மத்தியில் தார் ராக்ஸ் என்கிற புதிய 5-டோர் தார் வாகனத்தை சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இந்த தார் ராக்ஸ் வாகனத்தை புக் செய்த கஸ்டமருக்கு தான் தலையில் இடியை போட்ட மாதிரி ஒரு செய்தியை மஹிந்திரா தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒரு காரை ஷோரூமில் புக் செய்தீர்கள் என்றால், அதுகுறித்த அறிவிப்பு குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவரின் மொபைல் போனுக்கு வரும். இது எல்லா கார் நிறுவனங்களும் செய்வதுதான்.

அந்த குறுஞ்செய்தியில் வாகனத்தை எப்போது டெலிவிரி பெற வேண்டியிருக்கும் என்கிற குறிப்பும் இடம்பெற்றிருக்கும். சில நேரங்களில், தெரிவிக்கப்பட்ட அந்த நாளில் காரை டெலிவிரி பெற முடியாவிடினும், அதற்கு முன்னாள்/ பின்னால் ஏதேனும் ஒரு நாளில் டெலிவிரி பெற்றுவிடுவோம். இவ்வாறான குறுஞ்செய்திகள் மூலம் பலமுறை மஹிந்திரா அதன் கஸ்டமர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

mahindra thar roxx waiting period

சில வருடங்களுக்கு முன்னர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை புக் செய்தவர்களுக்கு 1 - 1.5 வருடத்திற்கு பின் டெலிவிரி என தெரிவித்து அவர்களை மிரள வைத்திருந்தது. அந்த சமயத்தில் உலகளவில் குறைக்கடத்திகளுக்கு பற்றாக்குறை இருந்தது நினைவுக்கூரத்தக்கது. அந்த சமயத்தில் மஹிந்திரா தார் வாகனத்தை புக் செய்தவர்களுக்கும் இதேபோன்றதான ஷாக்கிங் மெசேஜ்களை மஹிந்திரா அனுப்பியதாக ஞாபகம்.

தற்போது மஹிந்திரா தார் ராக்ஸ் கஸ்டமருக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், உங்களது வாகனம் 2026 மார்ச் 4ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 3ஆம் தேதிக்கு உள்ளாக டெலிவிரி செய்யப்படும், முடிந்தவரையில் உங்களது டெலிவிரியை விரைவுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நம் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேதியே துவங்கிவிடும்.

mahindra thar roxx waiting period

மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் வாகனத்தை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது அறிமுகம் செய்தது. ஆனால், வாகனத்திற்கான புக்கிங்குகள் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தான் துவங்கப்பட்டன. முன்பதிவு துவங்கப்பட்ட வெறும் 1 மணிநேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான தார் ராக்ஸ் வாகனங்கள் புக் செய்யப்பட்டன.

இதன் காரணமாகவே, புக் செய்த வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெறுவது 1.5 வருடம் வரையில் அதிகமாக உள்ளது. மஹிந்திரா நிறுவனத்திற்கு மஹாராஷ்டிராவின் நாஷிக் நகரத்தில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அதிகப்பட்சமாக ஒவ்வொரு மாதமும் 9,500 தார் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் என இரண்டும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆசை, ஆசையாய் புது காரை புக் செய்துவிட்டு டெலிவிரிக்காக காத்திருக்கும் எவரொருவருக்கும் இந்த செய்தியை பார்த்தால் பெரிய அதிர்ச்சியாக இருக்கும். ஒரு சிலருக்கு 2026 மே மாதத்தில்தான் தார் ராக்ஸ் டெலிவிரி செய்யப்படும் என மெசேஜ் வந்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இருந்து மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்திற்கான டிமாண்டை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 18:21 [IST]
English summary
Mahindra thar roxx waiting period touched one and half years official communication revealed
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X