30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்! விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்.. உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

பிரேசில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறைய வைக்கும் விபத்து சம்பவம் பற்றிய முழுமையான தகவலை இப்பதிவில் காணலாம்.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

பார்ப்போர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் டிரக்கின் பக்கவாட்டு (கதவு) பகுதியில் இளைஞர் ஒருவர் தொங்கியபடிச் செல்லும் அக்காட்சியே, தற்போது வாகன ஓட்டிகளை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

ட்ரக்கின் முன்பகுதியில், பாதியளவு நுழைந்தபடி இழுத்து செல்லப்பட்ட பைக்கின் காட்சிகளும் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த பலரும் இப்படியும் சம்பவங்கள் நடைபெறுமா, என அதிர்ச்சியில் முற்றிலுமாக உறைந்திருக்கின்றனர்.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

நிதானமின்றி சாலையில் டிரக்கை இயக்கி வந்த அந்த டிரைவர் முன்னதாக பைக்கின்மீது மோதியிருக்கின்றார். இதையடுத்தே, ட்ரக்கின் பக்கவாட்டு பகுதியில் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி இளைஞர் பயணித்திருக்கின்றார். விபத்தை ஏற்படுத்திவிட்டு ட்ரக்கை நிறுத்தாமல் சென்றதன் காரணத்தினாலயே இந்த விபரீத செயலில் இளைஞர் களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

இதுமட்டுமின்றி, ட்ரக் மோதியதன் காரணத்தினால் இளைஞருடன் பயணித்த அவரது மனைவி பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கின்றனர். இந்த கொடூர நிகழ்வின் காரணத்தினாலேயே ட்ரக் நிறுத்தாதபோதும் விடாப்பிடியாக அந்த இளைஞர் தொங்கியபடி பயணித்திருக்கின்றார்.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

அவ்வாறு தொங்கியபடியே சுமார் 30 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை ட்ரக்கில் தொங்கியபடி இளைஞர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், சம்பவத்தின்போது ட்ரக்கின் டிரைவர் ஆக்ரோஷமாகவும், மிகவும் முரட்டுத் தனமாகவும் நடந்துக் கொண்டதாக ட்ரக்கை நிறுத்த முயன்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும், விடாப்பிடியாக விரட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் ஒரு வழியாக ட்ரக் டிரைவரை மடக்கி இளைஞரை மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, அடாவடி தனத்தில் ஈடுபட்ட ட்ரக் ஓட்டுனரையும் போலீஸிடத்தில் பிடித்து கொடுத்திருக்கின்றனர்.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

பிரேசில் நாட்டில் உள்ள சான்டா கேடரினா (Santa Catarina) எனும் பகுதியிலேயே நெஞ்சை உறைய வைக்கக் கூடிய இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ட்ரக் டிரைவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சில போதைப் பொருட்களைப் போலீஸார் ட்ரக்கில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.

30கிமீ தொங்கியபடி பயணித்த இளைஞர்... விடாமல் விரட்டி சென்று மீட்ட வாகன ஓட்டிகள்... உறைய வைக்கும் நிகழ்வின் வீடியோ!

முன்னதாக, இளைஞர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் உணர்ந்த பிற வாகன ஓட்டிகள் ட்ரக்கை பல முறை எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்களையும் அச்சுறுத்தும் வகையில் அந்த டிரைவர் நடந்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் வாசிகள் ஊடகங்களிடத்தில் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே பெரும் விடா முயற்சியின் அடிப்படையில் இளைஞர் பிற வாகன ஓட்டிகள் பத்திரமாக மீட்டெடுத்திருக்கின்றார்.

குறிப்பு: கடைசி இரு படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young Man Clings Truck Door For 30 KMs After His Motorcycle Hits. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X