ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 ஸ்லாவியா செடான் காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இந்தியாவில் செடான் கார்களின் இடத்தை மெல்ல மெல்ல எஸ்யூவி கார்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு ஒவ்வொரு மாதத்திலும் விற்பனை செய்யப்படும் பயணிகள் கார்களின் எண்ணிக்கையே சாட்சி. இருப்பினும் செடான் கார்களின் ஆட்சியை மீட்டுக்கொண்டுவரும் முயற்சியாக ஸ்கோடா பிராண்டில் இருந்து புதிய பிரீமியம் காம்பெக்ட் செடான் காராக ஸ்லாவியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் இருந்து நடப்பு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்லாவியா, கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ராபிட் செடான் மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் ராபிட்டை காட்டிலும் ஸ்லாவியா அளவில் சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பிரிவுகளிலும் பரிணாம வளர்ச்சியை பெற்றதாக உள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இதில் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றை விவரிக்கும் வீடியோ ஒன்று ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் உள்ள மற்ற மாடர்ன் கார்களில் வழங்கப்படுவதை போன்று ரிமோட் சாவியில்லா நுழைவு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வாகனம் திருடு போவதை எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவற்றை ஸ்லாவியா பெற்றுள்ளது.

இவை ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக இந்த காம்பெக்ட் செடான் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லாவியாவின் டாப் வேரியண்ட்களில் இவற்றுடன் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தானும் வழங்கப்படுகிறது. இந்த பொத்தான் ஆனது கதவு கைப்பிடிகளுடன் செயல்படுவதாக உள்ளது. இந்திய சந்தையில் செடான் பிரிவில் உள்ள ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களில் வழங்கப்படுவதை போன்று மொத்தம் 6 காற்றுப்பைகள் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஸ்லாவியாவில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

ஆனால் ஸ்லாவியாவின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே 6 காற்றுப்பைகளும் வழங்கப்படுகிறது. விலை குறைவான வேரியண்ட்களில் முன்பக்கத்தில் இரு காற்றுப்பைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் செடான் காரில் ஓட்டுனர் கால்முட்டிக்கும் காற்றுப்பை வழங்கப்படுகிறது. ஆனால் அது ஸ்லாவியாவின் எந்தவொரு வேரியண்ட்டிலும் வழங்கப்படவில்லை.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இவற்றுடன் மிக முக்கிய வாகன பாதுகாப்பு அம்சமாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா ஸ்லாவியாவில் வழங்கப்பட்டுள்ளது. இது ரிவர்ஸில் காரை பார்க் செய்யும்போது மிகவும் உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி, ரிவர்ஸில் வரும்போது பின்புறத்தை காண ஓட்டுனர் பயன்படுத்தும் உட்புற கேபின் கண்ணாடி ஸ்லாவியாவில் ஆட்டோ-டிம்மிங் வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் மற்ற வாகனங்களின் ஒளியால் கண்ணாடியில் கண் கூசுவதை தவிர்க்கும்.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இத்தகைய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி ஸ்கோடா ராபிட் செடானில் வழங்கப்படவில்லை. குழந்தை இருக்கையை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் கொக்கிகள் இரண்டாவது இருக்கை வரிசையில் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து ஸ்லாவியாவில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களான ஹில் ஹோல்ட் உதவி, எலக்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு உள்ளிட்டவை காரின் ட்ரைவ் பண்பை மேம்படுத்துவதாக உள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இவற்றுடன் பிரேக் டிஸ்க் துடைப்பான், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், மோதல்-தடுப்பு பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் இந்த ஸ்கோடா செடான் மாடல் பெறுகிறது. பிரிவில் எந்தவொரு மாடல் பெற்றில்லாத எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக்கிங் அமைப்பை முதல் செடான் காராக ஸ்லாவியா ஏற்று வந்துள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

என்ஜினை பொறுத்தவரையில், 2022 ஸ்லாவியா வெறும் பெட்ரோல் காராகவே கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செடான் காருக்கு 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினும், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினும் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா செடானில் இத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இவை இரண்டுடனும் ஸ்டாண்டர்ட் டிரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம் 1.0 லி என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும், 1.5 லி என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச்சும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.69 லட்சங்கள் - ரூ.15.39 லட்சங்கள் வரையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2022, 15:11 [IST]
English summary
Skoda revealed 2022 slavia safety features explained video read here to find more
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+