சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

சிஐஎஸ்எஃப் படை வீரர்களுடன் இணைந்து டாடா சஃபாரி கார் கம்பீர நடைபோடும் வீடியோ வெளியாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

டாடா நிறுவனத்தின் புதுமுக கார்களில் சஃபாரி மாடலும் ஒன்று. நீண்ட காலங்களுக்கு பின்னர் புத்துணர்வான ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் இக்காரை களமிறக்கியிருக்கின்றது. சஃபாரி, அரசியல்வாதிகளின் பிரியமான கார் ஆகும். இது யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது என நாங்கள் நம்புகின்றோம். கடந்த காலங்களில் முதலைச்சர்கள் தொடங்கி பல்வேறு முக்கிய மத்திய மந்திரிகளின் பாதுகாப்பு வாகனமாக சஃபாரி காரே பயன்படுத்தப்பட்டன.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

இந்த நிலையிலேயே சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF) டாடா சஃபாரி காரை அதன் படையில் இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரையே காசியாபாத்தில் நடைபெற்ற 52-வது ரைசிங் தினத்தின்போது, விஐபி-க்களின் பாதுகாப்புகுறித்த ஒத்திகை அணிவகுப்பில் சிஐஎஃப் வீரர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

புத்தம் புதிய டாடா சஃபாரி காரை நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புத்துறை பயன்படுத்தியிருப்பது அதன் வாடிக்கையாளர்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, வரும் காலங்களில் இக்காரின் விற்பனைச் செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

டாடா நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பிக்கை மற்றும் சஃபாரி காரின் பிரமாண்ட தோற்றம் உள்ளிட்டவை மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. எனவேதான் இக்காருக்கு காத்திருப்பு காலம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. சென்னையில் மட்டும் 1 முதல் 1.5 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம் நிலவுவதாகக் கூறப்படுகின்றது.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

இன்னும் சில நகரங்களில் இந்த காத்திருப்பு காலம் 2 மாதங்களுக்கும் அதிகமாக நீடிப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், இப்போது டாடா சஃபாரி எஸ்யூவி காரை புக் செய்வோர் குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. டாடா நிறுவனம் சஃபாரி காருக்கு ரூ. 14.69 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது ஆரம்பநிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

சிஐஎஸ்எஃப் படையில் இணைந்த டாடா சஃபாரி?.. வீரர்களுக்கு இணையாக கம்பீர நடைபோடும் வீடியோ... அட்டகாசமா இருக்கு!!

அதிகபட்சமாக இக்கார் ரூ. 21.45 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனம், ஹாரியர் எஸ்யூவி காரை தயாரித்து வரும் அதே ஒமெகா-ஆர்க் பிளாட்பாரத்தில் வைத்தே சஃபாரியையும் தயாரித்து வருகின்றது. இக்கார் தற்போது 9 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Image Courtesy: DD News

புதுமுக சஃபாரி கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்கு வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
CISF Used All-New Safari SUV To Demonstrate Various Drills During 52nd Raising Day. Read In Tamil.
Story first published: Friday, March 12, 2021, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X