இந்தியாவின் சிறந்த மிட்சைஸ் செடான் கார்கள் - சிறப்பு தொகுப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் மெல்ல ஹேட்ச்பேக் கார்களிலிருந்தும், என்ட்ரி லெவல் செடான் கார்களிலிருந்தும் அடுத்த கட்டத்துக்கு நகரத் துவங்கிவிட்டனர். இதனை பல்ஸ் பிடித்து பார்த்து இருக்கும் மாடல்களையும் மேம்படுத்தியும், மாற்றாக புதிய மாடல்களையும் கார் நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.

இதுபோன்று, இந்திய மார்க்கெட்டில் இருக்கும் முக்கிய மிட்சைஸ் கார் மாடல்களின் முழு விபரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது. மிட்சைஸ் கார் மாடல்களையும் அவற்றின் முழு விபரங்களை அளிக்கும் டிரைவ்ஸ்பார்க்கின் சிறப்பு தகவல் பக்கத்தின் இணைப்பும் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.49 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை

மைலேஜ்: 16.8 கிமீ/லி

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வரை மிட்சைஸ் மார்க்கெட்டின் நம்பர்- 1 காராக வலம் வந்த ஹோண்டா சிட்டிக்கு டீசல் மாடல் இல்லாமல் இப்போது பின்தங்கி நிற்கிறது. மேலும், புதிய ஹூண்டாய் வெர்னா ஹோண்டா சிட்டியை ஓரங்கட்டிவிட்டது. இருப்பினும், தரம், சிறந்த பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனையில் ஓரளவு தாக்குப் பிடித்து வருகிறது ஹோண்டா சிட்டி. ஹோண்டா சிட்டியின் முழுமையான தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.44 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரை

மைலேஜ்

பெட்ரோல்: 17.43 கிமீ/லி(1.4), 17.17 கிமீ/லி(1.6லி)

ஆட்டோமேட்டிக்: 16.44 (1.6 லி பெட்ரோல்)

டீசல்: 22.47 கிமீ/லி

டீசல் ஆட்டோமேட்டிக் - 19.08 கிமீ/லி

முழு விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்

2011ல் வந்த புதிய புளூயிடிக் வெர்னா ஹூண்டாய் விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின்கள் என அனைத்திலும் ஹூண்டாய் வெர்னா சிறப்பாக இருப்பதால் இப்போது விற்பனையில் நம்பர் - 1 காராக திகழ்கிறது.

 நிசான் சன்னி

நிசான் சன்னி

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.6.95 லட்சம் முதல் ரூ.10.44 லட்சம் வரை

மைலேஜ்

பெட்ரோல் - 16.95 கிமீ/லி

பெட்ரோல் ஆட்டோமேட்டிக் - 17.97 கிமீ/லி

பெட்ரோல் - 21.1கிமீ/லி

சன்னியின் முழு விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மைக்ராவால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தவித்த நிசானுக்கு இந்திய மார்க்கெட்டில் முக்கியத்துவத்தை அளித்த மாடல் நிசான் சன்னி. குறைவான விலை, தாராள இடவசதி, சிறந்த எஞ்சின்கள் சன்னிக்கு முக்கிய அம்சங்களாக கூறலாம்.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

ஃபோர்டு ஃபியஸ்ட்டா

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.69 லட்சம் முதல் ரூ.10.82 லட்சம் வரை

மைலேஜ்

பெட்ரோல் - 17.0 கிமீ/லி

பெட்ரோல் ஆட்டோமேட்டிக் - 16.97 கிமீ/லி

டீசல் - 23.5 கிமீ/லி

ஃபியஸ்ட்டா முழு விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்.

சிறந்த காராக இருந்தாலும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலை நிர்ணயம் செய்து ஃபியஸ்ட்டாவின் மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டது ஃபோர்டு. விலை குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஃபோர்டு ஃபியஸ்ட்டா பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

மாருதி எஸ்எக்ஸ் - 4

மாருதி எஸ்எக்ஸ் - 4

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.93 லட்சம் முதல் ரூ.12.13 லட்சம் வரை

மைலேஜ்

பெட்ரோல் - 16.51 கிமீ/லி

டீசல் 21.79 கிமீ/லி

சிஎன்ஜி - 22.1 கிமீ/கி

முழு விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

கம்பீரமான டிசைன், அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்ட மாருதி எஸ்எக்ஸ்- 4 காரும் அதிக விலை நிர்ணயித்ததன் காரணமாக வாடிக்கையாளர்களை கவராமல் பின்தங்கிவிட்டது. மாருதி பிராண்டுதான் வேண்டும் என்பவர்களுக்கான மிட்சைஸ் கார். மாருதி எஸ்எக்ஸ் - 4 கார் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.67 லட்சம் முதல் ரூ.11.56 லட்சம் வரை

முழு விபரம்

மிட்சைஸ் செக்மென்ட்டில் மிகச்சிறந்த கார் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ. இருப்பினும், சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள், ஸ்பேர் பார்ட்ஸ் விலை, விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவற்றில் ஃபோக்ஸ்வேகனின் சொதப்பல்களால் வென்ட்டோவுக்கு உரிய இடம் கிடைக்காமல் தவிக்கிறது. வென்ட்டோ கார் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.36 லட்சம் முதல் ரூ.12.10 லட்சம் வரை

முழு விபரம்

நிசான் சன்னியின் ரீபேட்ஜ் மாடல்தான் ரெனோ ஸ்காலா. ஆனால், சன்னியைவிட புறத்தோற்றத்திலும், அகத்தோற்றத்திலும் சற்று பிரிமியம் அம்சங்களை புகுத்தியுள்ளது ரெனோ. சன்னியைவிட விலை அதிகம். பெட்ரோல், டீசல் மாடலில் கிடைக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.43 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரை

முழு விபரம்

சிறந்த கட்டுமானம் மற்றும் டிசைன் கொண்ட மிட்சைஸ் கார் ஸ்கோடா ரேபிட். -போக்ஸ்வேகன் வென்ட்டோவில் இருக்கும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் விற்பனைக்கு வருகிறது. சர்வீஸ் பிரச்னைகள், ஸ்பேர் பார்ட்ஸ் விலை ஆகியவை ஸ்கோடா ரேபிட்டுக்கு மார்க்கெட்டில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வருகிறது.

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

சென்னை ஆன்ரோடு விலை

ரூ.8.32 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை

முழு விபரம்

டிசைன், சிறந்த எஞ்சின்களை கொண்டிருந்தாலும் ஃபியட்டின் கட்டமைப்பு வசதிகளால் நிலையான இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், டாடாவிடமிருந்து பிரிந்து வந்து தனியாக ஷோரூம்களையும், சர்வீஸ் மையங்களையும் ஃபியட் திறந்து வருகிறது.இதனால், லீனியாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. லீனியாவின் கூடுதல் விபரங்களை பெற இங்கே சொடுக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2013, 13:45 [IST]
English summary
Here is the best midsize sedan cars list in the country. Take a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+