ஃபியட் லீனியா: டெஸ்ட் ட்ரைவ்

சிக்னலிலிருந்து லீனியாவை கிளப்பும்போது ஆர அமர பிக்கப் ஆகிறது. ஆக்சிலேட்டருக்கு உடனடி ரெஸ்பான்ஸ் கொடுக்க மறுக்கிறது. 30 கிமீ தூரத்தை கடந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் ஐதராபாத் நெடுஞ்சாலையை பிடித்தோம். 80 கிமீ வேகத்துக்கு மேல் செல்ல அந்த சாலையில் கட்டுப்பாடு உள்ளது. 80 கிமீ வேகத்தில் லீனியாவை பரிசோதித்தோம்.

டீசல் கார் என்பதால் 80 கிமீ வேகத்தில் கண்ணாடிகளை இறக்கிவிட்டால், அதிர்வுகள் சற்று பலமாக காதுகளில் விழுகின்றன. மேலும், ஆரம்ப வேகத்தை விட மித வேகத்தில் படுசமர்த்தாக செல்கிறது லீனியா. அச்சரை சுத்தமாகவும், அடக்கமாகவும் சாலையை அளந்து ஓட்டுவதற்கு லாவகமாக இருக்கிறது.

Fiat Linea

வேக கட்டுப்பாட்டு எல்லை முடிந்தவுடன் லீனியாவை ஒரு பிடி பிடித்து போக்குவரத்து இல்லாத நேரத்தில் சடன் பிரேக் அடித்தோம். ஏபிஎஸ் பிரேக் தொழில்நுட்பத்தால் சறுக்காமல், பின்புறத்தை திருப்பாமல் அழகாக நின்றது.

ஒரு வழியாக மாலை 4.30 மணிக்கு நந்தி ஹில்ஸ் அடிவாரத்தை அடைந்தோம். சமதள சாலை மாறி மலை சாலையில் ஏறத் துவங்கியது. குறை சொல்ல முடியாத அளவுக்கு லீனியாவின் எடையை சமாளித்து மலை சாலையில் ஏறத் துவங்கியது. லீனியாவின் டீசல் எஞ்சின் எதிர்பார்த்தபடி உடனடி ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை என்றாலும், அதன் ஸ்டீயரிங் வீல் ரெஸ்பான்ஸ் பற்றி கூறியே ஆக வேண்டும்.

லீனியாவின் கையாளுமை படுஜோராக இருக்கிறது. ஒரு மிட்சைஸ் காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வு துளிகூட இல்லை. கொண்டை ஊசி வளைவுகளில் மண்டை காயாமல் ஓட்ட துணைபுரிந்த லீனியாவின் ஸ்டீயரிங் வீலுக்கு ஒரு 'ஓ' போடலாம். அந்த அளவுக்கு லாவகமாக திருப்புகிறது. 6 மணியளவில் நந்தி மலையின் உச்சியை அடைந்தோம். லீனியா எஞ்சினுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு நந்தி மலையின் அழகை பருக துவங்கினோம். காரில் வந்த சோர்வை நீக்கி புத்துணர்ச்சி கொடுத்தது.

45 நிமிடங்கள் ஆகியிருக்கும். இருளுக்கு வழிவிட்டு சூரியன் தனது கதிர்களை சுருக்க துவங்கினான். இருள் சூழ்ந்த அந்த நேரமும், பெங்களூர் தூரமும் நந்தி மலைக்கு கட்டாய விடை கொடுக்க வைத்தது. மீண்டும் லீனியாவை கிளப்பினோம். இரவில் பயணத்திற்கு போதுமான அளவுக்கு லீனியாவின் ஹெட்லைட்டுகள் பிரகாசமாக இருந்தன. வரும்போது லீனியாவின் சாதக பாதகங்களை அலசியவாறு இரவு பெங்களுரை அடைந்தோம்.

ஃபியட் லீனியா டெஸ்ட் ட்ரைவ் கேலரி

More from DriveSpark

Article Published On: Monday, June 4, 2012, 9:47 [IST]
English summary
The 2012 Linea offers a host of new features like an attractive gadgetry, automatic climate control, electrically adjustable outside rear view mirror, front and rear armrest with glove box, three rear headrests, collapsible rear sun protection curtain, rear AC vents at knee and foot level and power windows with auto down and delay feature.
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+