இத்தாலிய அழகி ஃபியட் லீனியாவுடன் ஓர் இனிய பயணம்
பெட்ரோல் விலையால் டீசல் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஃபியட் லீனியாவின் டீசல் மாடலை சமீபத்தில் ட்ரைவ்ஸ்பார்க் டீம் எடிட்டர்கள் டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பல நிறுவனங்களின் கார்களுக்கு உயிர்கொடுத்து வரும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட லீனியா கார் நம் கையில் கிடைத்தது.
நகர போக்குவரத்து நெரிசலிலும், நெடுஞ்சாலைகளிலும் வழக்கமாக டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்த்த நிலையில், இந்த முறை லீனியாவின் பராக்கிரமத்தை பரிசோதிக்க நகர சாலை, நெடுஞ்சாலை, மலைபாங்கான சாலை என மூன்றிலும் டெஸ்ட் ட்ரைவ் செய்ய திட்டமிட்டோம். இதற்காக, பெங்களூர் அருகிலுள்ள நந்தி மலைக்கு லீனியாவை கொண்டு செல்ல திட்டமிட்டோம்.

அதற்கு முன்னதாக லீனியா பற்றிய ஓர் சிறு குறிப்பு. இந்திய மார்க்கெட்டில் ஃபியட் விற்பனை செய்து வரும் இரண்டு மாடல்களில் லீனியாவும் ஒன்று. பெரிய அளவில் குறை சொல்லி ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு வெளிப்புறம் அழகாகவே இருக்கிறது. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் வசதிகேற்ப 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
டயர்கள் சறுக்கிக்கொள்ளாத ஏபிஎஸ் பிரேக் தொழில்நுட்பம், உயிர்காக்கும் காற்றுப் பைகள், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. பீயேஜ் வண்ண இன்டிரியரும் அசத்துகிறது. மற்றவை காரில் போய்க் கொண்டே பார்க்கலாம். டிரைவர் இருக்கையின் வலதுபக்க கதவில் கண்ணாடிகளை ஏற்றி இறக்குவதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்புற இருக்கையில் அமர்ந்திருப்போரை இதமாக்க தனி ஏசி வென்ட்டும் இருக்கிறது.
அலுவலகத்திலிருந்து புறப்பட்டு மெல்ல பெங்களூர் மிதமான பிற்பகல் போக்குவரத்து நெரிசலில் கலந்தோம். இந்தியாவிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் பெங்களூரும் ஒன்று என்ற சமீபத்திய ஆய்வு கூறியதற்கு ஏற்ப பிற்பகலிலேயே சாலையில் ஊர்ந்துதான் செல்ல முடிந்தது.
ஃபியட் லீனியா டெஸ்ட் ட்ரைவ் கேலரி


Click it and Unblock the Notifications








