மலேசியாவில் 'இம்பல் பாடி கிட்' சன்னிக்கு வரவேற்பு: இந்தியாவிலும் அறிமுகமாகுமா?
மலேசியாவில் இம்பல் பாடி கிட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் மலேசிய மார்க்கெட்டில் சன்னி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்குள் இந்த புதிய காருக்கு 7,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இம்பல் பாடி கிட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட சன்னி வேரியண்ட்டுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம். சாதாரண மாடலைவிட கஸ்டமைஸ் செய்யப்படும் இம்பல் பாடி கிட் சன்னி காருக்கு ரூ.1.69 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், இம்பல் பாடி கிட் சன்னிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். இந்திய மார்க்கெட்டிலும் இம்பல் பாடி கிட் மாடலை நிசான் அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மலேசியாவில் அல்மேரா என்ற பெயரில் சன்னி விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








