மஹிந்திரா ரேவா இ2ஓ., எலக்ட்ரிக் கார் நாள் வாடகைக்கு விடப்படுகிறது
இ2ஓ., எலக்ட்ரிக் காரை நாள் வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான திட்டத்தை மஹிந்திரா ரேவாவும், கார்ஸ் ஆன் ரென்ட் வாடகை டாக்சி நிறுவனமும் இணைந்து அறிவித்துள்ளன. அக்டோபர் முதல் தேதி முதல் இந்த சிறப்பு வாடகை கார் திட்டம் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் சிஇஓ., சேத்தன் மெயினி குறிப்பிடுகையில்," காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும்போது ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த வாடகை கார் திட்டத்தின் மூலம் இ2ஓ., காரின் ஏராளமான நன்மைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

கட்டணம்
குறைந்தபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.200 கட்டணமாகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.500 கட்டணமும், 24 மணி நேரத்துக்கு ரூ.800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் நகரங்கள்
பெங்களூர், டெல்லி, மும்பை மாநகரங்களில் இந்த வாடகை கார் திட்டம் செயல்பாட்டு வருகிறது. திரும்ப பெறத்தக்க ரூ.5,000 காப்புத் தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி வாடிக்கையாளர்கள் இ2ஓ., காரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவு
சாதாரண கார்களை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவவதற்கான திட்டங்களைவிட மூன்றில் ஒரு பங்கு கட்டணமே இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கார்கள்
ஒவ்வொரு நகரத்திலும் 5 இ2ஓ., எலக்ட்ரிக் கார்கள் வாடகைக்கு விடப்பட உள்ளது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
மஹிந்திரா இ2ஓ., காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்.

விற்பனை மந்தம்
சிறந்த எலக்ட்ரிக் காராக வந்தாலும், அரசாங்கத்தின் மானிய திட்டங்கள் அமலில் இல்லாததால் விலை அதிகமாக உள்ளது. விற்பனை மந்தமாக இருப்பதால் இ2ஓ.,வை பிரபலப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








