குட் நியூஸ்... விரைவில் வருகிறது கிராண்ட் ஐ10 டீசல் ஆட்டோமேட்டிக்!!

கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்தை இந்த செய்தி ஈர்த்துள்ளது. ஆம், அடுத்த மாத இறுதியில் கிராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக் டீசல் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இதுவே மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட ஆட்டோமேட்டிக் டீசல் காராக இருக்கும் என்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். எனவே, பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது திட்டத்துக்கு பிரேக் போட்டுள்ளனர்.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கிறது. தவிர, பெட்ரோல் மாடலின் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

டீசல் ஆட்டோமேட்டிக்

டீசல் ஆட்டோமேட்டிக்

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிராண்ட் ஐ10 டீசல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதே எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட ஆட்டோமேட்டிக் டீசல் மாடலாக இது இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 பவர் விபரம்

பவர் விபரம்

1.1 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்றே ஆற்றல் வெளிப்படுத்தும் திறனை ஆட்டோமேட்டிக் மாடலும் கொண்டிருக்கும். 69 எச்பி ஆற்றலையும், 153 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

குறைந்த விலை மாடல்

குறைந்த விலை மாடல்

தற்போது மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட ஆட்டோமேட்டிக் டீசல் கார் என்ற பெருமையை ஹூண்டாயின் மற்றொரு தயாரிப்பான வெர்னா செடான் கார்தான் தக்க வைத்து வருகிறது. தற்போது ரூ.10.34 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிராண்ட் ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் டீசல் மாடல் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வர உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் கிராண்ட் ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2013, 11:06 [IST]
English summary
This is one news that is going to get a lot of attention. Hyundai India, the second largest automaker in the country will introduce an automatic transmission version of its diesel Grand i10 before the end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+