2014ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்ற கிராண்ட் ஐ10!!

By Saravana

2014ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெற்றுள்ளது.

இந்தியாவின் சிறந்த காருக்கான விருதை ஜேகே டயர்ஸ் நிறுவனம் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. நாட்டின் மிக உயரிய ஆட்டோமொபைல் விருதுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த விருதை பிரபல ஆட்டோமொபைல் இதழின் எடிட்டர்கள் அடங்கிய நீதிபதிகள் குழு தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கார் விருதுக்கான காரை தேர்வு செய்யும் நீதிபதிகள் குழுவில் டாப் கியர், ஆட்டோ இண்டியா, மோட்டாரிங், கார் இண்டியா, ஓவர்டிரைவ், ஆட்டோ பைல்டு, ஆட்டோஎக்ஸ், ஹிண்டு பிசினஸ் லைன் மற்றும் எவோ ஆகியவற்றின் எடிட்டர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று இரவு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், 2014ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கார் விருது கிராண்ட் ஐ10 காருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வந்து ஹிட்டடித்த கார் மாடல்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரும் ஒன்று. இந்த நிலையில், கிராண்ட் ஐ10 காருக்கு இந்த விருது கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் வெற்றிக்கான காரணங்கள் சிலவற்றை ஸ்லைடரில் காணலாம்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

விருது வழங்கும் நிகழ்ச்சி

டெல்லியில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் கிராண்ட் ஐ10 காருக்கான விருதை ஹூண்டாய் உயர் அதிகாரிகள் ஷின் மற்றும் ராகேஷ் வத்சவா ஆகியோர் ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் அருண் குமார் பஜோரியாவிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்.

 விற்பனையில் அசத்தல்

விற்பனையில் அசத்தல்

செப்டம்பர் 3ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிராண்ட் ஐ10 இரண்டாவது மாதத்திலேயே விற்பனையில் 5ம் இடத்தை பிடித்தது. மேலும், முதல் 90 நாட்களில் 35,000 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

செவர்லே பீட் டீசல் விற்பனையில் சோபிக்காத நிலையில், ஓர் சிறந்த டீசல் ஹேட்ச்பேக் காரை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த கார் சிறந்த சாய்ஸ். இதுவே இந்த காரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த காரில் டர்போ லேக் குறைவான 71 பிஎஸ் பவரை அளிக்கும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினும், 83 பிஎஸ் பவரை அளிக்கும் பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் - 18.9 கிமீ/லி

டீசல் - 24 கிமீ/லி

வசதிகள்

வசதிகள்

பவர் விண்டோஸ், எலக்ட்ரிக் ரியர் வியூ கண்ணாடிகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புஷ் பட்டன் ஸ்டார்ட், குரோமியம் பூச்சு கொண்ட டோர் ஹேண்டில்கள், டில்ட் ஸ்டீயரிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அஸ்ட்டா வேரியண்ட்டில் ஸ்பாய்லர், ரியர் டிஃபாகர், புளூடூத், அலாய் வீல்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும், ஆக்சஸெரீஸ்களும் இடம்பெற்றிருக்கின்றன.

விலை

விலை

பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.29 லட்சம்

டீசல் ஆரம்ப விலை ரூ.5.23 லட்சம்

 கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

2014ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை பெற்றிருக்கும் ஹூண்டாய் ஐ10 கார் பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2013, 16:40 [IST]
English summary
Hyundai Motor India has won the most coveted Indian Car of the Year 2014 (ICOTY) award for the newly launched Grand. Grand has created a new benchmark in terms of quality, features and technology offering higher value proposition to Indian customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+