ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு சிறப்பான வரவேற்பு!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 30 நாட்களில் 11,000 எக்ஸ்சென்ட் கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திருக்கும் புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்புகளில் அதிக அளவிலான விசாரணைகள் இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

அதாவது, இதுவரை ஒரு லட்சம் பேர் காரை பற்றி விசாரித்து சென்றுள்ளனராம். தவிர, அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து திருப்தி தெரிவிப்பதாக ஹுண்டாய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. ரூ.4.66 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








