மாருதி கார்களுக்கு இப்போதைய தள்ளுபடி சலுகைகள் விபரம்!

By Saravana

கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில் அனைத்து கார் மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகளை மாருதி வழங்குகிறது.

ஆல்ட்டோ, ரிட்ஸ், வேகன் ஆர் மற்றும் எர்டிகா உள்ளிட்ட மாருதி கார்களுக்கு தற்போது தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், எஸ்எக்ஸ்4 கார் மார்க்கெட்டிலிருந்து விடைபெறுவதால் இருப்பில் உள்ள கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.


தள்ளுபடி விபரம்

தள்ளுபடி விபரம்

அதிகபட்சம் ரூ.90,000 வரையிலான தள்ளுபடி சலுகைகள் மாருதி கார்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்டவையும் அடங்கும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மாடல் வாரியாக வழங்கப்படும் தள்ளுபடிகளை காணலாம்.

 மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

எர்டிகா எம்பிவி காருக்கு ரூ.60,000 வரையில் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

எர்டிகா பற்றிய முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

மாருதி எஸ்எக்ஸ்4

மாருதி எஸ்எக்ஸ்4

எஸ்எக்ஸ்4 காருக்கு மாற்றாக புதிய சியாஸ் செடான் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. எனவே, எஸ்எக்ஸ்4 காருக்கு அதிகபட்சமாக ரூ.90,000 வரையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

எஸ்எக்ஸ்4 கார் பற்றி முழுமையான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மாருதி ஸ்டிங்ரே

மாருதி ஸ்டிங்ரே

மாருதி ஸ்டிங்ரே காருக்கு ரூ.60,000 வரையில் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஸ்டிங்ரே காரின் முழு விபரத்தை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

விற்பனையில் மாருதிக்கு பக்க பலமாக இருந்து வரும் வேகன் ஆர் காருக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

வேகன் ஆர் காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ் காருக்கு ரூ.55,000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரிட்ஸ் பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 ஆல்ட்டோ 800

ஆல்ட்டோ 800

ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.50,000 வரையிலும், ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.40,000 வரையிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஆல்ட்டோ 800 காரின் முழு விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

டிசையர்

டிசையர்

டிசையர் காருக்கு ரூ.25,000 வரையிலும், டாக்சி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் டிசையர் டூர் காருக்கு ரூ.30,000 வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

டிசையர் காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்விஃப்ட்

ஸ்விஃப்ட்

ஸ்விஃப்ட் காரின் டீசல் மாடலுக்கு ரூ.30,000 வரையிலும், பெட்ரோல் மாடலுக்கு ரூ.25,000 வரையிலும் அதிகபட்சமாக சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்விஃப்ட் காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

செலிரியோவுக்கு இல்லை

செலிரியோவுக்கு இல்லை

விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் செலிரியோவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

செலிரியோ காரின் முழு விபரத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2014, 10:12 [IST]
English summary
Maruti Suzuki will be offering discounts on most its models with a maximum discount of INR 90,000. The Japanese manufacturer will be providing discounts on its Alto, Ritz, Wagon R, Stingray, SX4 and Ertiga. Many other manufacturers are also trying to woo in customers with either discounts or benefits.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+