புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II காரை நெருக்கமாக பார்க்கலாம் வாங்க!

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோஸ்ட் காரின் ஸ்டான்டர்டு வீல்பேஸ் மற்றும் எக்ஸ்டன்டடு வீல் பேஸ் ஆகிய இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோஸ்ட் காரை மிக நெருக்கமாக பார்க்கும் விதத்தில் பிரத்யேக புகைப்பட தொகுப்பை வழங்குகிறோம். இந்த முழுமையான படத்தொகுப்பு உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். பிரத்யேக படங்களை பார்ப்பதற்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.


 மும்பையில் விழா

மும்பையில் விழா

இன்று மதியம் மும்பையில் நடந்த விழாவில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 முதல்முறையாக...

முதல்முறையாக...

2009ம் ஆண்டு சர்வதேச அளவில் முதல்முறை யாக பிராங்க்ஃபர்ட் ஷோ மூலமாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான விலை மாடல் என்பதுடன், விற்பனையிலும் அதிக எண்ணிக்கைகளை பெற்றுத்தருகிறது. இதன் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் கொண்ட மாடல் 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவம்

வடிவம்

ஸ்டான்டர்டு வீல் பேஸ் மாடல் 5,399மிமீ நீளமும், 1,948மிமீ அகலமும், 1,550மிமீ உயரமும் கொண்டது. இது 3,295மிமீ வீல் பேஸ் கொண்ட கார் மாடல் என்பதால் தாராள இடவசதியை வழங்கும் ஆடம்பர கார். இந்த காரில் 82.5லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

நீள, அகலத்தில் மட்டுமல்லாமல் எடையிலும் மிகவும் அதிகமான கார். இது 2,360 கிலோ வெற்று எடையும், பயணிகள் அல்லாமல் எரிபொருள் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து 2,435கிலோ கெர்ப் எடையும் கொண்டது.

 ஹெட்லைட்

ஹெட்லைட்

சுற்றிலும் பகல்நேர ரன்னிங் விளக்குகள் கொண்ட எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

19 இஞ்ச் அலாய் வீல்கள் ஸ்டான்டர்டாகவும், 21 இஞ்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

 ஆபரணச் சின்னம்

ஆபரணச் சின்னம்

ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியத்தையும், அந்தஸ்தையும் அடையாளச் சின்னமாக உணர்த்தும் ஆபரணச் சின்னம். ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

 டெயில் லைட்

டெயில் லைட்

காரின் டிசைனில் விகாரம் இல்லாமல் இயைந்து நிற்கும் டெயில் லைட்.

குடை

குடை

வேண்டும்போது மட்டும் வெளியே எடுத்துக் கொள்ள வசதியாக, இடைஞ்சல் தராத இடத்தில் இருக்கும் குடை.

அலங்காரம்

அலங்காரம்

அலங்கார மரப்பலகை மற்றும் குரோம் பூச்சினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் டேஷ்போர்டு.

பளபளக்கும் இன்டிரியர்

பளபளக்கும் இன்டிரியர்

சகல வசதிகளுடன், கண்ணை கவரும் இன்டிரியர். ட்ரேட் மார்க் கடிகாரம்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

புதிய டிசைனுக்கு மாறியிருக்கும் கோஸ்ட் சீரிஸ்- 2 காரின் டயல்கள்.

ஐ- டிரைவ் கன்ட்ரோலர்

ஐ- டிரைவ் கன்ட்ரோலர்

தொழில்நுட்ப வசதிகளை எளிதாக கட்டுப்படுவதற்கான ஐடிரைவ் கன்ட்ரோலர். இது இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் ஆப்ஷன்களை நேரடியாகவும், எளிமையாகவும் கட்டுப்படுத்த உதவும்.

 ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்தும் சுவிட்சுகளுடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்.

 அகல விரியும் கதவுகள்

அகல விரியும் கதவுகள்

பிற கார்களை போன்று ஒரே திசையில் இல்லாமல், எதிரெதிர் திசையில் விரியும் கதவுகளால் காருக்குள் ஏறி, இறங்குவது வசதியாக இருக்கும்.

உயர்தர இருக்கை

உயர்தர இருக்கை

ஓட்டுபவர், முன் இருக்கை பயணிகள் வசதியாக அமரும் வகையில், இருக்கையின் அடிப்பாகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இது தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் என்பதால், மிக சொகுசான பயணத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கையின் நடுவில் பல்வேறு வசதிகள் மற்றும் கப்ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக மிக சொகுசாகவும், தாராளமான இடவசதியையும் தரும் பின் இருக்கை.

டிவி திரை

டிவி திரை

பின்புற பயணிகளுக்கான பொழுதுபோக்கு வசதிக்காக முன் இருக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி திரை.

குரோம் சுவிட்சுகள்

குரோம் சுவிட்சுகள்

குரோம் பூச்சுடன் கூடிய சுவிட்சுகள், கதவை திறப்பதற்கான நாப் ஆகியவை காரின் மதிப்பை கூட்டுவதோடு, நீண்ட கால உழைப்பிற்கும் உத்தவாத தரும் தரத்தை கொண்டவை.

 ஆர்ம் ரெஸ்ட்

ஆர்ம் ரெஸ்ட்

பொழுதுபோக்கு வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் மற்றும் கப் ஹோல்டர்கள் கொண்ட பின்புற ஆர்ம் ரெஸ்ட். இதுபோன்று, ஏராளமான வசதிகளை கொடுத்து வியப்பை ஏற்படுத்துகிறது ரோல்ஸ்ராய்ஸ்.

More from DriveSpark

Article Published On: Friday, November 7, 2014, 17:37 [IST]
English summary
Rolls-Royce, the iconic carmaker has launched the Rolls-Royce Ghost Series II in India today. Here are given some exclusive photos of the new model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+