இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்!
முதல்முறை கார் வாங்குபவர்களின் தேர்வு பட்டியலில் பெட்ரோல் கார்களே முன்னிலை பெறுகின்றன. பட்ஜெட் விலை, எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு செலவீனம் போன்றவை பெட்ரோல் கார்கள் மீது அதிக கவனம் செலுத்துவதற்கான காரணங்களாகின்றன.
இந்த நிலையில், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஏதுவாக தற்போது மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள் குறித்த பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். இது வாசகர்களுக்கும், அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

அராய் மைலேஜ்
அராய் அமைப்பு வெளியிட்டிருக்கும் கார்களின் மைலேஜ் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தொகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அதிக மைலேஜ் தரும் டாப்-10 பெட்ரோல் கார்களின் விபரங்களை காணலாம்.

10. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
சிறப்பான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் கொண்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் லிட்டர் பெட்ரோலுக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. அதிக சிறப்பம்சங்கள், பெப்பி டிசைன் போன்றவை இந்த காரை கவர காரணங்களாகின்றன. விற்பனையிலும் சோபித்து வருகிறது.

9. நிசான் மைக்ரா ஆக்டிவ்
நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார் மாடல். லிட்டருக்கு 19.49 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது. பட்ஜெட் விலை, சிறந்த பெட்ரோல் எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் தன்னிறைவான பட்ஜெட் கார் மாடல்.
கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

8. ஹூண்டாய் ஐ10
ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்ற மாடலும் கூட. சிறந்த டிசைன், இடவசதி, நல்ல மைலேஜ் கொண்ட மாடல். லிட்டருக்கு 19.8 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ10 காரை பற்றிய முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

7.மாருதி ஆல்ட்டோ கே10
பட்ஜெட் விலையில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் மாடல். லிட்டருக்கு 20.92 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.
ஆல்ட்டோ கே10 காரை பற்றிய முழுமையான தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.

6. மாருதி வேகன் ஆர்
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று. இதன் டால் பாய் டிசைன் உயரமானவர்களுக்கும் சிறந்த ஹெட்ரூமை அளிக்கிறது. லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.
இந்த காரை பற்றிய முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

5. டட்சன் கோ
நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டில் வெளிவந்திருக்கும் கார் மாடல். சிறப்பான இடவசதி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போன்றவை கவரக்கூடிய அம்சங்கள். லிட்டருக்கு 20.6 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
கோ காரை பற்றிய முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

4. ஹூண்டாய் இயான்
ஹூண்டாய் நிறுவனத்தின் குட்டிக் கார் மாடல். மாருதி ஆல்ட்டோவுக்கு நேர் போட்டியாக இறக்கப்பட்ட இந்த மாடல் விற்பனையிலும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு கை கொடுத்து வருகிறது. புளூயிடிக் டிசைன், அதிக மைலேஜ் போன்றவை இதன் ப்ளஸ் பாயிண்டுகள். லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
இயான் காரை பற்றிய முழுமையான விபரங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

3. மாருதி ஆல்ட்டோ 800
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது. பட்ஜெட் விலை, அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்ற சாதகங்களுடன் விற்பனையில் கலக்கி வருகிறது.
ஆல்ட்டோ 800 காரை பற்றிய முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

2. மாருதி செலிரியோ
மாருதி செலிரியோ இரண்டாம் இடத்தில் உள்ளது. பட்ஜெட் விலையிலான ஏஎம்டி மாடல் என்பதுடன், அதிக மைலேஜ் தருவதால் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.

1.டாடா நானோ
மிக குறைவான விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கார் மாடல். அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு இரண்டாவது கார் விரும்புபவர்களுக்கு ஏற்ற கார். அதிக எரிபொருள் சிக்கனம், பட்ஜெட் விலை போன்றவையும் நானோவுக்கான சாதகங்கள். அராய் சான்றுபடி லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்ற பெருமையை பெறுகிறது.
நானோ காரை பற்றிய முழுமையான விபரங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

டீசல் கார்கள் பட்டியல்
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் கார்கள் பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








