இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டாப்-10 டீசல் கார்கள்!

கார் வாங்கும்போது மைலேஜும் மிக முக்கியமான அம்சமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாதத் தவணையுடன் சேர்த்து, எரிபொருளுக்கு மாதாமாதம் கணிசமான தொகையை செலவிட வேண்டியிருப்பதால் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக, டீசல் கார்கள் மீது அதிக வாடிக்கையாளர்கள் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அதிக மைலேஜ், பெட்ரோலைவிட டீசல் விலை சிறிது குறைவு என்பது போன்ற காரணங்களால் டீசல் கார்களை வாங்குதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு கார் வாங்கும் படலத்தை துவங்குகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப்- 10 டீசல் கார்களை இந்த செய்தித் தொகுப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம்.


பட்டியல்

பட்டியல்

அராய் சான்று கொடுத்த மைலேஜ் விபரத்தின் அடிப்படையில் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.

 10.நிசான் மைக்ரா

10.நிசான் மைக்ரா

மைலேஜ்: 23.08 கிமீ/லி

பட்டியலில் 10வது இடத்தில் நிசான் மைக்ரா கார் இருக்கிறது. இந்த காரில் 63 பிஎச்பி ஆற்றலையும், 160 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரின் விலை விபரம், சிறப்பம்சங்கள், வசதிகள் போன்ற ஏ டு இசட் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

9.மாருதி ரிட்ஸ்

9.மாருதி ரிட்ஸ்

மைலேஜ்: 23.2 கிமீ/லி

பட்டியலில் 9வது இடத்தில் மாருதி ரிட்ஸ் கார் இருக்கிறது. ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரின் விலை விபரம், சிறப்பம்சங்கள், வசதிகள் போன்ற ஏ டு இசட் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

8.டொயோட்டா லிவா

8.டொயோட்டா லிவா

மைலேஜ்: 23.59 கிமீ/லி

டாப்- 8 பட்டியலில் 8வது இடத்தை டொயோட்டா லிவா கார் இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த காரின் விலை விபரம், சிறப்பம்சங்கள், வசதிகள் போன்ற ஏ டு இசட் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

7.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

7.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மைலேஜ்: 24.0 கிமீ/லி

அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் டாப்-10 கார்களில் 7வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பெறுகிறது. இந்த காரில் 70 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரின் விலை விபரம், சிறப்பம்சங்கள், வசதிகள் போன்ற ஏ டு இசட் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

6. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

6. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

மைலேஜ்: 24.4 கிமீ/லி

பட்டியலில் 6வது இடத்தில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் இடம்பெறுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் செயல்புரிகிறது. ஆனால், இந்த எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முழு விபரங்களையும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

5.ஃபோர்டு ஃபியஸ்ட்டா

5.ஃபோர்டு ஃபியஸ்ட்டா

மைலேஜ்: 25.01 கிமீ/லி

அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் 5வது இடத்தில் ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார் இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 89 பிஎச்பி பவரையும், 204 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்த்பபட்டிருக்கிறது. இந்த காரின் முழு விபரங்களையும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

4.செவர்லே பீட்

4.செவர்லே பீட்

மைலேஜ்: 25.44 கிமீ/லி

இந்தியாவின் சிறிய டீசல் எஞ்சினுடன் விற்பனையாகும் கார் மாடலான செவர்லே பீட் கார் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் 58 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் அளிக்கும். பட்ஜெட் விலையில் டீசல் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் முதல் சாய்ஸ் இது. இந்த காரின் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

3. ஹோண்டா அமேஸ்

3. ஹோண்டா அமேஸ்

மைலேஜ்: 25.8 கிமீ/லி

இந்தியாவில் ஹோண்டாவின் முதல் டீசல் காராக வந்த அமேஸ் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. ஹோண்டா அமேஸ் காரில் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். ஹோண்டாவுக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் இந்த காரை பற்றிய தகவல்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

 2. ஹோண்டா சிட்டி

2. ஹோண்டா சிட்டி

மைலேஜ்: 26.0 கிமீ/லி

தற்போது இந்தியாவின் நம்பர்-1 மைலேஜ் கார் ஹோண்டா சிட்டிதான். ஹோண்டா அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மைலேஜில் சிட்டி விஞ்சுகிறது. ஹோண்டா சிட்டி எஞ்சினும் 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த கார் பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 1. மாருதி சியாஸ்

1. மாருதி சியாஸ்

மைலேஜ்: 26.21 கிமீ/லி

விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய மாருதி சியாஸ் செடான் காரின் மைலேஜ் விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. எனவே, இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. மாருதி சியாஸ் கார் லிட்டருக்கு 26.21 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. விற்பனைக்கு வந்தவுடன் தனது நேர் எதிரியான ஹோண்டா சிட்டியை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பட்டத்தை மாருதி சியாஸ் செடான் கார் பெற இருக்கிறது.

மைலேஜ் மட்டும் போதுமா...?!

மைலேஜ் மட்டும் போதுமா...?!

மைலேஜ் மிக முக்கிய காரணியாக இருந்தாலும் மைலேஜ் மட்டும் போதுமா? பராமரிப்பு செலவீனம், பாதுகாப்பு வசதிகள், விலை போன்றவற்றை ஒப்பீடு செய்து வாங்குவதே சாலச் சிறந்தது. கார்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் இங்கே கிளிக் செய்து பெறலாம்.

எங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2014, 17:02 [IST]
English summary
we'll discuss about the top-10 most fuel efficient diesel cars in India. The basis on which we have short-listed these cars, is the ARAI mileage figures that these cars achieved during their test.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+