புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் !
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி வரும் 31ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு ஜீப் டீலர்ஷிப்புகளில் ஏற்கனவே முன்பதிவும் பெறப்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் ஆலையில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு பெரும்பான்மையான உதிரிபாகங்கள் இந்தியாவிலுள்ள சப்ளையர்களிடமிருந்து பெறப்படும். எனவே, மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video


புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் கிடைக்கும்.

இந்த எஸ்யூவி மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் கிடைக்கும். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, முதலில் டீசல் மாடலில் மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் பின்னர் வரும் என்பது இப்போதைய தகவலாக இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டிசைன் மிகவும் கவரும் வகையில் இருக்கிறது. இந்த எஸ்யூவியின் இன்டீரியரும் வாடிக்கையாளர்களை கவரும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த எஸ்யூவி 5 விதமான வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் ரூ.17 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு இது நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது. விலை சவாலாக நிர்ணயிக்கும் பட்சத்தில், நிச்சயம் சிறந்த வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








