மன்மதன்... புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியை அண்மையில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதன் அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

By Saravana Rajan

ஜீப் பிராண்டு குறித்து கார் ஆர்வலர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. பலருக்கு ஜீப் எஸ்யூவிகள் மீது அலாதி பிரியம் வைத்திருப்பதை பார்க்க முடியும். அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை கூட வியக்க வைப்பதாக இருக்கும்.

கடவுளின் தேசமாக வர்ணிக்கப்படும் எனது பூர்வீகமான கேரளாவில் கம்பீரமானவர்களின் கைகளில் முரட்டுத்தனமான ஜீப் எஸ்யூவியில் கெத்தாக வலம் வருவதை கண்டு வியப்படைந்ததுடன், ஜீப் பிராண்டு மீது அதீத ஆர்வத்தையும் ஏற்படுத்தியதுண்டு.

மன்மதன்... புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கால சக்கரம் வேகமாக சுழன்று இப்போது ஆட்டோமொபைல் துறையுடன் கலந்து கட்டி விட்ட எனது வாழ்க்கையில் புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறு வயதில் ஜீப் எஸ்யூவி என்றாலே முரட்டுத்தனமான விஷயங்களை பெற்ற வாகனம் என்று மனதில் பதிந்த பிம்பத்துடன் இந்த புதிய காம்பஸ் எஸ்யூவியும் அந்த வல்லமைகளை பெற்றிருக்கிறதா? என்ற ஆர்வத்துடன் டெஸ்ட் டிரைவ் செய்தேன். எனது எதிர்பார்ப்புகளை இந்த எஸ்யூவியை ஓட்டி பார்த்த அனுபவத்தை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜீப் பாரம்பரியத்தை பரைசாற்றும் ஏராளமான டிசைன் அம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட போட்டியாளர்களை ஒப்பிடுகையில், ஒரு முறையான எஸ்யூவி மாடலாகவே தோற்றமளிக்கிறது. முழுமையான எஸ்யூவி மாடலை விரும்புவோரை இந்த ஜீப் காம்பஸ் நிச்சயம் கவரும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பு பக்கத்தில் ஜீப் நிறுவனத்தின் முத்திரையாக பிரதபலிக்கும் க்ரோம் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேக் 3 வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேகமான எஸ்ஆர்-71 உளவு விமானத்தின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் விதத்திலான பானட் அமைப்பும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

க்ரில் அமைப்புக்கு பக்கவாட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன், அதன் கீழ்பாகத்தில் பகல்நேர விளக்குகளுடன் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. க்ரில் அமைப்பு எஞ்சினை குளிர்விக்கும் காற்று புகும் அமைப்பு போல காட்சி அளித்தாலும், அதன் ஊடாக காற்று செல்வதற்கான வாய்ப்பு இல்லை. இதற்காக, பம்பரில் பெரிய அளவிலான ஏர்டேம் பகுதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பொதுவாக வீல் ஆர்ச்சுகள் வளைவு போன்ற அமைப்பிலேயே பல கார்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால், புதிய ஜீப் காம்பஸ் காரில் சரிவக வடிவிலான வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வீல் ஆர்ச்சுகள் மேடு பள்ளங்களில் செல்லும்போதும், இதன் 16 இன்ச் சக்கரங்களை அழகாக கையாளும் வகையில் இருக்கிறது. இந்த எஸ்யூவியில் ஃபயர்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட கூரையை சிறிய க்ரோம் பீடிங் ஒன்று தனியாக பிரித்து காட்டுகிறது. இது காரின் அழகுக்கு அழகு சேர்க்கும் அம்சம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் ஜீப் பிராண்டின் பேட்ஜ் அட்டகாசமாக இருக்கிறது. அத்துடன், இந்த எஸ்யூவியின் பின்புற அழகுக்கு இதன் 3டி- எல்இடி டெயில் லைட்டுகள் வலு சேர்க்கின்றன. வலிமையான பம்பர் அமைப்பும் இந்த காரின் சிறப்புகளில் முக்கியமானது.

இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புற டிசைன் வெகுவாக கவர்ந்த நிலையில், உட்புறத்திற்கு இப்போது செல்வோம். புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் இன்டீரியர் மிக சிறப்பாக இருந்தாலும் மிக எளிமையாக இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. வெளிர் சாம்பல் நிறமும், கருப்பு வண்ண பாகங்களும் இன்டீரியர் பகுதியை அலங்கரிக்கின்ரன. ஆனால், டேஷ்போர்டு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என்று கூற முடியவில்லை.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பேஸ் மாடல்களில் 5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், டாப் வேரியண்ட்டுகளில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் 8.4 இன்ச் திரை அளவுடைய சாதனம் பயன்படுத்தப்படும் நிலையில், இந்திய மாடலில் இது ஏமாற்றம் தரும் விஷயம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும், இந்த 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி இல்லாததும் அடுத்த ஏமாற்றம். அதேநேரத்தில், ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதி இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. நடுவில் மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மைலேஜ், வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்ட உள்ளிட்ட பல தகவல்களை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தை கட்டுப்படுத்தும் பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக ஸ்டீயரிங் வீலில் பட்டன்கள் கொடுக்கப்படும் நிலையில், இந்த எஸ்யூவியில் வால்யூம் பட்டன்கள் மறைத்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜீப் எஸ்யூவியில் இருக்கும் செலக்- டெர்ரெய்ன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை இயக்குவதற்கு கியர் லிவருக்கு அருகிலேயே டயல் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு செல்வதற்கு ஏற்ற வகையிலான மிதியடிகளும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் இருக்கைகள் மிக சொகுசான உணர்வை தருகிறது. அதேநேரத்தில், வெளிர் சாம்பல் நிற இருக்கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கூடுதல் பிரத்யேனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இருக்கையில் சிவப்பு வண்ண நூல் தையல் போட்டிருப்பதும் அழகு. இந்த இருக்கைகள் கால்களுக்கு நல்ல சப்போர்ட் தருவதால் சொகுசான உணர்வை தருகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற இருக்கைகளும் மிக சொகுசாகவும் தொடைக்கு நல்ல சப்போர்ட் தருவதாக இருக்கின்றன. உயரமானவர்களும் சொகுசாக பயணிக்கும் வகையில் போதிய ஹெட்ரூம் மற்றும் கால் வைப்பதற்கான இடவசதியை பெற்றிருக்கிறது ஜீப் காம்பஸ் எஸ்யூவி.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆனால், பின் இருக்கையின் நடுவில் அமர்ந்திருப்பவருக்கு கால் வைக்க போதுமான இடவசதி இல்லை. ரியர் ஏசி வென்ட்டுகள் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு காரணமாக நடுவில் அமர்ந்திருப்பவர் சவுகரியமான உணர்வை பெற முடியாது. பின் இருக்கையில் உள்ள ஆர்ம் ரெஸ்ட்டில் இரண்டு கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 438 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. பின் இருக்கையை மடக்கினால் 770 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி பெற முடியும். போட்டியாளரான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 513 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கும் நிலையில், இது சற்று ஏமாற்றம் தரும் விஷயம். அதேபோன்று, ஹேண்ட் ப்ரீ வசதி மூலமாக பூட் ரூம் திறக்கும் வசதியும் இல்லை.

 புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நல்ல வேளையாக பாதுகாப்பு அம்சங்களில் கை வைக்கவில்லை ஜீப் நிறுவனம். புதிய காம்பஸ் எஸ்யூவியில் பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கார் கவிழ்வதை தவிர்க்கும் பாதுகாப்பு நுட்பங்களை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடலில் வருகிறது. பெட்ரோல் மாடலில் 160 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை டெஸ்ட் டிரைவ் செய்தேன்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த டீசல் எஞ்சின் 1,800 ஆர்பிஎம் வரையில் டர்போலேக் தெரிகிறது. அதி்லிருந்து 4,000 ஆர்பிஎம் வரை சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது இந்த டீசல் எஞ்சின். இந்த எஞ்சின் அதிர்வுகள் குறைவாகவும், மிகவும் மென்மையாக இருப்பதுடன், 2,000 ஆர்பிஎம்.,ல் 120 கிமீ வேகத்தை அசால்ட்டாக கடந்து செல்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், 3,500 ஆர்பிஎம் என்ற அளவை கடந்தவுடன், எஞ்சின் அதிக இறைச்சலுடன் செல்கிறது. அதேநேரத்தில், டாப் ரேஞ்சில் மிகவும் சிறப்பான செயல்திறனை இந்த எஞ்சின் வழங்குவதையும் உணர முடிந்தது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கியர் மாற்றும்போது மென்மையாக இருந்தாலும், விரைவான கியர் ஷிஃப்ட்டின்போது லேசான தடங்கல் இருக்கிறது. எஞ்சின் அதிர்வுகள் அதிக அளவில் உள்ளே கேட்காதவாறு தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதும் சிறப்பாக கூறலாம்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் இன்டிபென்டென்ட் சாப்மேன் லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு காருக்கு சிறந்த கையாளுமையை வழங்குவதுடன், மோசமான சாலைகளிலும் அனாயசமாக கடந்து செல்ல உதவுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த சஸ்பென்ஷன் அமைப்பு கையாளுமையில் சிறப்பாக இருப்பதுடன், பயணிப்போருக்கு சொகுசான உணர்வையும் தருகிறது. மேடு பள்ளங்கள், நெடுஞ்சாலைகள், வளைவுகளை இந்த கார் சிறப்பாக கையாள்கிறது. நடுத்தர வேகத்தில் பாடி ரோல் அதிகம் தெரியாத அளவுக்கு சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நெடுஞ்சாலையில் செல்கையில் ஸ்டீயரிங் வீலை தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதேநேரேத்தில், ஆஃப்ரோடுகளில் செல்லும்போது இதன் ஸ்டீயரிங் வீல் சிறப்பான உணர்வை தருகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், பின்புற சக்கரங்களை வெறும் 300 மில்லி செகண்டில் இணைத்து ஆஃப்ரோடுக்கு தயாராகி விடுகிறது. இந்த அம்சம், தான் ஒரு ஜீப் பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்று கூறுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன்புற பம்பரின் விசேஷ லிப் அமைப்பு காரணமாக கரடுமுரடான சாலைகளிலும் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. 17 டிகிரி செங்குத்தான சாலையில் ஏறுவதற்கும், 32 டிகிரி சரிவான சாலையில் இறங்குவதற்கும்போதும் அலட்டிக் கொள்ளவில்லை. வழியில் உள்ள தடைகளையும் எளிதாக கடக்க உதவுகிறது. இந்த எஸ்யூவி 480 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை எளிதாக கடக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் இருக்கும் செலக்- டெர்ரெயின் ஆஃப்ரோடு சிஸ்டம் நான்குவிதமான டிரைவிங் மோடுகளை பெற்றிருக்கிறது. Auto, Snow, Sand மற்றும் Mud என்ற நான்குவிதமான டிரைவிங் நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும். ஆட்டோ மோடில் வைக்கும்போது தானாகவே நிலப்பரப்பின் தன்மையை உணர்ந்து கொண்டு காரின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Snow மோடில் வைத்து இயக்கும்போது சக்கரங்கள் சறுக்காமல் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். Sand மோடில் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆஃப் செய்யப்பட்டு, அதிக ஆக்சிலரேஷனுடன் கார் முன்னேறுகிறது. சேறு நிறைந்த பகுதிகளை கடப்பதற்கு Mud மோடு பயன்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஜீப் காம்பஸ் பெயருக்கு ஏற்றாற்போல் திக்கு தெரியாத வனங்களில் இருந்த ஆறுகள், சரிவான மலைச்சாலைகளை கூட எளிதாக கடக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதி மூலமாக சரிவான மலைப் பகுதிகளை அச்சமில்லாமல் கடக்க முடிந்தது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்து குறைவான விலையில் இறக்குவதற்காக பல சிறப்பம்சங்களை சமரசம் செய்து கொண்டிருந்தாலும், ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைனில் வெளிவந்துள்ள இந்த கார் வெகுவாக கவர்ந்துவிட்டது.

தீர்ப்பு

தீர்ப்பு

சிறப்பான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள், கம்பீரமான தோற்றம், ஆஃப்ரோடு தகவமைப்புகளுடன் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

விலையை மட்டும் சவாலாக நிர்ணயித்துவிட்டால், புதிய ஜீப் காம்பஸ் இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று ஆணித்தரமாக கூறலாம்.

டெஸ்ட் டிரைவ் விபரம்

டெஸ்ட் டிரைவ் விபரம்

  • டெஸ்ட் டிரைவ் செய்த மாடல்: ஜீப் காம்பஸ் லிமிடேட்[ஆப்ஷனல்] டீசல்
  • எஞ்சின் விபரம்: 2.0 லிட்டர் மல்டிஜெட் II ஜீப்
  • எஞ்சின் சக்தி: 170பிஎச்பி பவர் @ ஆர்பிஎம்/ 350என்எம் டார்க் @ 1750 - 2000ஆர்பிஎம்
  • கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்
  • எரிபொருள் கலன் கொள்திறன்: 60லிட்டர்
  • சராசரி மைலேஜ்: லிட்டருக்கு 11 கிமீ
  • டெஸ்ட் டிரைவ் செய்த இடம்: பெங்களூர்- சிக்மகளூர்
  • எதிர்பார்க்கும் ஆன்ரோடு விலை: ரூ.17 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை
  •  தெரிந்து கொள்வோம்

    தெரிந்து கொள்வோம்

    அனைத்து ஜீப் எஸ்யூவிகளும் 7 ஸ்லாட் க்ரில் அமைப்பை பெற்று வருகின்றன. இந்த க்ரில் அமைப்பை பயன்படுத்துவது குறித்து 2001ம் ஆண்டில் ஜீப் நிறுவனத்துக்கும், ஹம்மர் நிறுவனத்துக்கும் இடையே சட்டப்போராட்டம் நடந்தது.

    ஜீப் தயாரிப்புகளில் ரேங்லர் எஸ்யூவி மட்டும் தற்போது கதவுகளை தனியாக கழற்றும் வசதியுடன் வருகிறது.

    Words: Jobo Kuruvilla

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep #car review
English summary
I had the privilege of driving Jeep's new Compass SUV for India, set to launch in August. In the crowded Compact SUV market, can the Compass hold its own and deliver the Jeep brand's rugged image? We ask, is the Compass a true mud-slugger? Here's what we discovered.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X