புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும், புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. சிறந்த வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவற்றுடன் மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், வரும் 21ந் தேதி புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அறிமுகம் செய்த கையோடு, டெலிவிரியும் துவங்கப்பட உள்ளது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த புதிய எஸ்யூவியில் சாலை நிலைகளுக்கு ஏற்ப எக்கானமி, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் தனித்துவமான வடிவமைப்பு போட்டியாளர்களிடத்தில் இருந்து நிச்சயம் வேறுபட்டதாக இருக்கிறது. அதேபோன்று, இன்டீரியரும் சிறப்பாக இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

சொகுசு கார்களில் இருப்பது போன்ற ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் 6.5 அங்குல தொடுதிரை வசதி வாடிக்கையாளர்களை கவரும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த எஸ்யூவியானது வசதிகளை பொறுத்து, XE, XM, XT, XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த கார் ரூ.6.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள ரஞ்சன்கவுன் ஆலையில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, டெலிவிரி கொடுப்பதில் தாமதம் இருக்காது என்று தெரிகிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அறிமுக தேதி அறிவிப்பு!

இந்த காரின் சாதக, பாதகங்களை அலசும் எமது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2017, 15:35 [IST]
English summary
Tata Nexon India launch has been scheduled for September 21, 2017. The Nexon sub-compact SUV production has begun at the Ranjangaon plant in Pune while bookings have begun at all dealerships in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+