Subscribe to DriveSpark

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

புதிய டாடா கார் வருகிறது என்றவுடன் வாடிக்கையாளர்கள் உதட்டை பிதுக்கிய காலம் போய் இப்போது பெரும் ஆவலுடன் காத்திருக்க செய்யும் அளவுக்கு, டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வுடைய புதிய கார்களை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து களமிறக்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த 2014ம் ஆண்டு கான்செப்ட் நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் கார் இப்போது தயாரிப்பு நிலையை எட்டி மார்க்கெட்டில் களம் புக இருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் ஏற்கனவே வந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா டியூவி300 போன்ற மாடல்கள் வந்து ஆண்டுகள் ஓடிய நிலையில், சற்று தாமதமாக இந்த செக்மென்ட்டில் களம் காண வருகிறது புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா டியாகோ மற்றும் டீகோர் கார்கள் வரிசையில், இந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மீதும் வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியை கொச்சியிலிருந்து இடுக்கி வரை நடந்த மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

அதில், இந்த கார் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் எந்தளவு பூர்த்தி செய்யப்போகிறது என்கிற கண்ணோட்டத்தின் அடிப்படையில் தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended Video - Watch Now!
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல். கடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலின் டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லாமல், தயாரிப்பு நிலையை எட்டி இருக்கிறது.

டிசைன்

டிசைன்

டிசைன் என்று சொல்லப்போனால் முதல் பார்வையிலேயே பிடித்து போகிறது டாடா நெக்ஸான். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் எஸ்யூவி மற்றும் கூபே ரக கார்களின் டிசைன் அம்சங்களை தாங்கிப் பிடித்து வந்துள்ளது. எஸ்யூவி ரக கார்களுக்குரிய கம்பீரம் குறையாமல்...!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வழக்கமான எஸ்யூவி மாடல்களிலிருந்து இதன் டிசைன் மிகவும் வேறுபட்டு இருப்பதே இதன் சிறப்பு. பூனை கண்கள் போன்று தோற்றமளிக்கும் ஹெட்லைட்டுகள், அதன் நடுவே ஹனிகோம்ப் க்ரில் அமைப்பு ஒரே பகுதியாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் கீழாக இருக்கும் பனி விளக்குகள் அறை, பம்பம் மற்றும் பெரிய ஏர் டேம் ஆகியவற்றை க்ரோம் பட்டை பிரித்து காட்டுவது ஹைலைட்டான விஷயம். பனி விளக்குகள் அறையை சுற்றிலும் வெள்ளை வண்ண பெயிண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் காரின் பக்கவாட்டு டிசைனும் முகப்பு டிசைனுடன் போட்டி போடுகிறது. கூபே கார் போன்று பின்னோக்கி சரியும் கூரை அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள், 16 இன்ச் அளவுடைய மெஷின் கட் அலாய் வீல்கள் டிசைனுக்கு வலு சேர்க்கின்றன.

கூரையும், சி பில்லர் அடர் சாம்பல் வண்ணம் பூசப்பட்டு இரட்டை வண்ணக் கலவை போல மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பெல்ட் லைனில் வெள்ளை வண்ண பூச்சுடன் பக்கவாட்டை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டுகிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முகப்பிலும், பக்கவாட்டிலும் டிசைனில் மிரட்டிய புதிய டாடா நெக்ஸான் காரின் பின்புற டிசைன் சற்றும் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. புதுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட சில அலங்காரம் எல்லோரையும் கவரும் வகையில் இல்லை.

டெயில் லைட்டுகளை இணைக்கும் எக்ஸ் ஃபேக்டர் என்று குறிப்பிடப்படும் டிசைன் சற்று உறுத்தலாக தெரிகிறது. அதேநேரத்தில், டெயில்லைட்டுகளின் டிசைனும், பம்பர் டிசைனும் நன்றாகவே இருக்கிறது.

மொத்தத்தில் புதிய டாடா நெக்ஸான் காரின் டிசைன் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று பொருட்கள் வைப்பதற்கான அதிக இடவசதி. இந்த காரில் 350 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது.

5 பெரிய பைகள் மற்றும் சூட்கேஸுகளை வைப்பதற்கான இடவசதி சிறப்பாக உள்ளது. பின் இருக்கையை மடக்கினால், அதிகபட்சமாக 690 லிட்டர் வரை கொள்திறனை அதிகரிக்க முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் காரின் வெளிப்புறத்தின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் என்று சொல்லக்கூடிய கோர்வை தரமும் சிறப்பாக இருக்கிறது. தேவையற்ற இடைவெளிகள் இல்லாமல் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 இன்டீரியர்

இன்டீரியர்

புதிய டாடா நெக்ஸான் காரின் இன்டீரியர் வடிவமைப்பும், வசதிகளும் வெகுவாக கவரும் வகையில் இருக்கின்றன. கருப்பு, பீஜ் மற்றும் சாம்பல் என மூன்று விதமான வண்ணக் கலவைகளிலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் காரில் 6.5 இன்ச் அளவுடைய எச்டி தொடுதிரை வசதி இருக்கிறது. டேஷ்போர்டின் நடுநாயகமாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த தொடுதிரை சாதனம், சொகுசு கார் போன்ற அந்தஸ்தை வழங்குகிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் டர்ன்- பை- டர்ன் நேவிகேஷன் வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃட்வேரை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் மிகவும் உயர்தர துல்லியத்தில் ஒலி வழங்கும் மியூசிக் சிஸ்டமாக இதனை கூற முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் சென்ட்ரல் கன்சோல் பளபளப்பு மிகுந்த கிளாசி பியானோ பிளாக் அலங்காரத்தில் கவர்கிறது. பட்டன்களின் வடிவமும், அமைப்பும் இயக்குவதற்கும், பார்ப்பதற்கும் சிறப்பாக இருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை இயக்குவதற்கான வசதிகள் இருக்கின்றன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் காரின் உட்புறத்தில் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்காக 31 ஸ்டோரேஜ் இடவசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

குளிர்பான பாட்டில்களை வைத்துக் கொள்வதற்கான குளிர்ச்சி தரும் க்ளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கதவில் குடை வைப்பதற்கான விசேஷ இடவசதியும், டேப்லெட், மொபைல்போன்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் பாதுகாப்பு மிக்க ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. அத்துடன், இரண்டு 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட்டுகள் உள்ளன.

அதில், ஒன்று பின்புறத்தில் பார்சல் ட்ரே அருகே உள்ளது. பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் உள்ளன. இரண்டு நிலைகளில் இதன் விசிறி வேகத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா நெக்ஸான் காரின் மிக முக்கிய வசதிகளில் ஒன்று, கைக்கடிகாரம் போல கையில் கட்டிக் கொள்ளக்கூடிய கீ ஃபாப் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கீ ஃபாப் கையில் கட்டியிருந்தால், கதவுகளை திறந்து மூடுவது, பூட் ரூமை திறந்த மூடுவது மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியரில் எந்த குறையும் இல்லை என்று கூற முடியாது. டேஷ்போர்டில் தேவையற்ற வகையில் எந்த வித உபயோகமும் இல்லாமல் சில பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவிங் மோடுகளை செலக்ட் செய்வதற்கான ரோட்டரி டயல் அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இந்த டயல் காரணமாக, கியர் லிவர் சற்று முன்னால் இருப்பதால், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட்டுகளை பயன்படுத்தும்போது சிறிய சிரமத்தை உணர முடிகிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் வீல் அருகில் இருக்கும் ஏசி வென்ட்டுகளை முழுவதுமாக மூட இயலவில்லை. இதனால், அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்று ஓட்டுனரின் கைகளுக்கு அதிக குளிர்ச்சியை தருவதாக இருக்கிறது. காரை நீண்ட தூரம் ஓட்டிச் செல்லும்போது இது நடைமுறை சிரமத்தை தரும்.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

புதிய டாடா நெக்ஸான் காரின் முன் இருக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு முன் இருக்கைகள் மிக சிறப்பான இடவசதியையும், சொகுசையும் வழங்குகிறது.

ஓட்டுனர் இருக்கையில் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி இருப்பதுடன், ஸ்டீயரிங் வீல் அமைப்பும் மிகச்சிறப்பாக இருப்பதால், சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட வசதியாக இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேநேரத்தில், இதன் தடிமனான ஏ பில்லர் வளைவுகளில் சற்று சிரமத்தை தருகிறது. அதேபோன்று, பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியும் கூட சிறியதாக இருப்பதும் பார்வை திறனுக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் தாழ்வான கூரை அமைப்பு பின் இருக்கை பணிகளுக்கான ஹெட்ரூமை பாதித்திருக்கும் என்று கருதி உள்ளே அமர்ந்தோம். ஆனால், சராசரி உயரம் கொண்டவர்களுக்கு மிகச் சிறப்பான ஹெட்ரூமை வழங்குகிறது.

மூன்று பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்றாலும், நடுவில் ஆரம் ரெஸ்ட் இருப்பதால், இரண்டு பேர் மிக சவுகரியமாக அமர்ந்து பயணிக்கலாம்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கை மிகவும் சாய்மானமாக கொடுக்கப்பட்டிருப்பது, நீண்ட தூர பயணங்களின்போது அசதியை வழங்கலாம். இது இந்த காரின் குறைகளில் ஒன்று.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய டாடா நெக்ஸான் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகளும், சக்கரங்களுக்கு பிரேக் பவரை சரியாக பிரித்தனுப்பும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. பகல் மற்றும் இரவு என இருநேரங்களிலும் பயன்படுத்துவதற்கான விசேஷ உட்புற ரியர் வியூ மிரரும் சிறப்பானது.

எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்

எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்

புதிய டாடா நெக்ஸான் கார் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும், நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வருகிறது. இரண்டு மாடல்களிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப, ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்த நுட்பம் வழங்குகிறது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

டாடா டியாகோ மற்றும் டீகோர் கார்களில் பயன்படுத்தப்படும் இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆரம்ப நிலையில் சற்று மந்தமாக இருக்கும் இந்த எஞ்சின், டர்போசார்ஜர் இயங்க துவங்கியதும், மிட் ரேஞ்ச்சில் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. இதனால், ஓவர்டேக் செய்யும்போது கியரை மாற்றும் அவசியம் ஏற்படுத்தவில்லை. டாப் ரேஞ்ச்சில் பவர் டெலிவிரி சற்று மந்தமாக இருப்பதையும் உணர முடிந்தது.

இந்த மூன்று சிலிண்டர் எஞ்சினிலிருந்து வரும் அதிர்வுகள் காருக்குள் உணரதவாறு மிகவும் சிறப்பாக சப்த தடுப்பு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட இந்த எஞ்சின் ஆரம்ப நிலையில் இருந்தே சிறப்பான பவர் டெலிவிரியை தருகிறது. டர்போலேக் என்பதை நுட்பமாக கண்டுபிடிக்கும் அளவுக்கு சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆரம்ப நிலையில் இருந்து நடுத்தர நிலை வரை இந்த எஞ்சின் சீரான பவர் டெலிவிரியை வெளஇப்படுத்துகிறது. 4,500 ஆர்பிஎம் தாண்டும்போது பவர் டெலிவிரியில் சுணக்கம் இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஆரம்ப நிலையிலும், நடுத்தர நிலையிலும் மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குவதால், நகர்ப்புறத்துக்கு மிக மிக ஏற்றதாக இருக்கும். நெடுஞ்சாலைகளில் நடுத்தர வேகத்தில் மிகச்

சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது. மேலும், கேபினுக்குள் அதிர்வுகளும், சப்தமும் குறைவாக இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரின் ஸ்டீயரிங் வீல் மிகவும் இலகுவாக இருக்கிறது. இதனால், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போது, இதன் ஸ்டீயரிங் அமைப்பு போதிய ஃபீட்பேக் கொடுக்கவில்லை.

இதன் காரணமாக, வளைவுகளை நெருங்கும்போது வேகத்தை வெகுவாக குறைத்து ஓட்ட வேண்டியிருக்கிறது. ஸ்டீயரிங் போன்றே க்ளட்ச் பெடலும் மிகவும் இலகுவான உணர்வை தருகிறது. அதேநேரத்தில், கியர் ஷிஃப்ட் மென்மையாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் சஸ்பென்ஷன் அமைப்பு இந்தியாவின் மோசமான சாலைகளை இலகுவாக கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், இதன் 209 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸும், மென்மையான சஸ்பென்ஷனும், வளைவுகளில் செல்லும்போது அதிக பாடி ரோல் இருப்பதை உணர முடிகிறது.

எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

வழக்கமான எஸ்யூவி வடிவமைப்பு தாத்பரியங்களிலிருந்து வேறுபட்டு வந்திருப்பதே டாடா நெக்ஸான் எஸ்யூவியின் முக்கிய பலமாக கூற முடியும். குறிப்பாக, டீசல் எஞ்சின் மாடல் வெகுவாக கவர்ந்தது.

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

  • 1945ம் ஆண்டு ரயில் எஞ்சின் தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் துவங்கப்பட்டது.
  • 1954ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர்- பென்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து டிரக் தயாரிப்பில் ஈடுபட்டது.
  • 1991ம் ஆண்டு டாடா சியாரா எஸ்யூவியுடன் பயணிகள் ரக வாகன தயாரிப்பில் களமிறங்கியது டாடா மோட்டார்ஸ்.
English summary
While the Nexon may look different, it is a few years late entering a segment that is the hottest property in the Indian car market today. So, has Tata done enough with the Nexon to beat its well-established rivals like the Maruti Vitara Brezza and the Ford EcoSport and is it worth your hard-earned cash?
Story first published: Sunday, July 30, 2017, 22:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark