தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

Written By:

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரை ஈர்க்கும் விதத்தில், பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி ரக கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியர்களின் விருப்பமான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹெட்லைட், புதிய க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவை குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவியில் புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

தற்போது பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. அதேநேரத்தில், இந்த புதிய மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் டிராகன் என்ற குடும்ப வரிசையிலான புதிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வந்துவிடும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும்.

ரெனோ கேப்டர்

ரெனோ கேப்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் மூலமாக இந்தியாவில் முகவரி பெற்றுக் கொண்ட ரெனோ கார் நிறுவனம், க்விட் கார் மூலமாக தனது வாடிக்கையாளர் வட்டத்தை விஸ்தரித்தது. இதைத்தொடர்ந்து, ரெனோ கேப்டர் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ரெனோ கார் நிறுவனம். டஸ்ட்டரைவிட கூடுதல் விலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலுக்கு போட்டியான அம்சங்கள், விலையில் இந்த கார் வர இருக்கிறது.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

இந்த காரின் வடிவமைப்பு நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற க்ராஸ்ஓவர் ரக மாடலாக இருக்கிறது. டஸ்ட்டர் எஸ்யூவியைவிட இந்த காரின் வீல் பேஸ் 213மிமீ அதிகம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரிலும் இடம்பெற்று இருக்கும்.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

வெளிநாடுகளில் 2.0 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதே ஆப்ஷன்கள் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டஸ்ட்டரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இதிலும் இடம்பெற இருக்கிறது. ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது.

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான்

அடுத்த மாதம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு, வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக அமையும் என்பதால் இந்த எஸ்யூவி பெரும் ஆவலைத் தூண்டி இருப்பது உண்மை.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

ஹார்மன் மியூசிக் சிஸ்டம், தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விருப்பம்போல் டிரைவிங் மோடுகள் என மிக அசத்தலான பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

இந்த எஸ்யூவி மாடலானது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் முதலில் வரும் இந்த எஸ்யூவியானது, பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் நிரந்தர அம்சங்களாக இடம்பெற இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. ரூ.6.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்த எஸ்யூவிக்கு இப்போதே பலர் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 மாருதி எஸ் க்ராஸ்

மாருதி எஸ் க்ராஸ்

பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனையில் சோபிக்காமல் ஏமாற்றத்தை தந்தது. விலையை எகிடுதகிடாக நிர்ணயித்து மாருதி சூடுபட்டுக்கொண்டது. பின்னர், சுதாரித்துக் கொண்டு விலையை குறைத்தும் பலனில்லை. இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல் நின்ற மாருதி இப்போது எஸ் க்ராஸ் காரில் சில மாற்றங்களை செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

க்ராஸ்ஓவர் ரகத்திலான இந்த காருக்கு சில மாற்றங்களை கொடுத்து எஸ்யூவி ரக காராக மாற்றுவதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஞ்சினியர்கள் மெனக்கெட்டுள்ளனர். புதிய க்ரோம் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை.

தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கும் புதிய எஸ்யூவி மாடல்கள்!

ஏற்கனவே இருக்கும் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Here is the list of upcoming compact SUVs with their key specifications, features, expected price and launch date, to help you understand more about the models that will enter India soon.
Story first published: Saturday, August 12, 2017, 15:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark