ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட் இனி மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு நவம்பரில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லாமல் பெட்ரோல் டாப் வேரியண்ட் மாடல் இல்லாதது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், இப்போது பெட்ரோல் டாப் வேரியண்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் எஸ்யூவியின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் இப்போது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.10.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பபட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் எஞ்சின் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் குறைவான வசதிகளுடன் கிடைத்த நிலையில், இப்போத வந்திருக்கும் இந்த டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, நெடுஞ்சாலையில் செல்லும்போது ஆக்சிலரேட்டர் பெடலை ஓட்டுனர் மிதிக்காமலேயே, காரை ஒரே வேகத்தில் செலுத்தும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மழை வரும்போது தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர்கள், பின்புறத்தை பார்த்து ரிவர்ஸ் எடுப்பதற்கான கேமரா வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 8 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், SYNC-3 நவீன தகவல் தொடர்பு வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி மற்றும் திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் பூட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கான ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட் சீட் மற்றும் மேலும் பல வசதிகள் உள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோபர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 122பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பெட்ரோல் மாடல் ஏற்கனவே இருப்பதுபோல பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

இதுதவிர, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட் இப்போது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருவது வாடிக்கையாளர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். அதிக வசதிகளுடன் கூடிய மாடலை இப்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் பெற முடியும். ஆட்டோமேட்டிக் மாடலைவிட விலையும் குறைவு.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 21, 2018, 10:43 [IST]
English summary
Ford India launched the new EcoSport facelift in the country in November 2017. The top-spec Titanium+ petrol trim was only offered with an automatic gearbox. Now, Ford has introduced 5-speed manual gearbox on the EcoSport Titanium+ petrol variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+