ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்பட இருக்கிறது. அதற்கான காரணங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. வண்டி வேகமாக செல்லும்பபோது, திடீரென வேகம் குறைவது மற்றும் பேட்டரி வேகமாக சார்ஜ் தீர்ந்து போவது குறித்து பல புகார்கள் வந்தன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில், எஞ்சின் பவரை சக்கரங்களுக்கு கடத்தும் பவர்டிரெயின் அமைப்பை கட்டுப்படுத்தும், பவர்டிரெயின் கன்ட்ரோல் மோடுயூல்(PCM) சாதனத்தில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதங்களுக்கு இடையில் சென்னை ஃபோர்டு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 7,249 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களில் இந்த பிரச்னை இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைத்து, PCM சாதனத்தின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்து தருவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் வழியாக தகவல் அனுப்பி, கட்டணமில்லாமல் சரிசெய்து தருவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

தங்களது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்த ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தனது இணையதளத்தில் சிறப்பு வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த பிரத்யேக பக்கத்தில் VIN நம்பரை கொடுத்து உங்களது ஈக்கோஸ்போர்ட் இந்த ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதா என்பதை உடனடியாக தெரிந்து கொண்டு, அருகிலுள்ள ஃபோர்டு டீலரை தொடர்பு கொண்டு சர்வீஸ் அப்பாயின்மென்ட் பெற்று பிரச்னையை சரிசெய்து கொள்ள முடியும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்தியாவின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் மிக முக்கிய தேர்வாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இருந்து வருகிறது. அத்துடன், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

இந்த சூழலில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு இரண்டாவது முறையாக மீண்டும் ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. முன்னதாக, இருக்கையின் சாய்மானத்தை தரும் அமைப்பில் தொழில்நுட்ப குறைபாடு இருந்ததற்காக 1,000 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் ரீகால் செய்யப்பட்டன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி டிசைன், கட்டுமானம், பாதுகாப்பு அம்சங்களில் மிக சிறப்பான மாடல். இந்த எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து எஞ்சின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மீண்டும் திரும்ப அழைக்கப்படுகிறது!

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் கிடைக்கிறது. ரூ.7.82 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்திலும் சிறந்த தேர்வாக இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இரண்டாவது முறையாக இப்போது ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Most Read Articles
English summary
Ford EcoSport Recall Details: Ford India has announced that they will be recalling 7249 units of the EcoSport petrol sold in the country. The examples of the crossover sold between November 2017 (the latest version) and March 2018 come under the recall.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X