ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய டாப் வேரியண்ட்!!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை உயர்ந்த டைட்டானியம் எஸ் என்ற புதிய வேரியண்ட்ட விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சன்ரூஃப், புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய வேரியணட்டில் இருக்கும் அசத்தலான வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

கேரளாவில் உள்ள ஷோரூமில் நிறுத்தப்பட்டு இருந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட்டின் படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கிறது. பல்வேறு கூடுதல் சிறப்புகள் கொண்ட இந்த வேரியண்ட்டின் முதல் ஸ்பை படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுதான் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் மிக மிக விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

இந்த புதிய வேரிண்ட்டில் கூரையில் சன்ரூஃப் அமைப்பு, கரும்பூச்சு கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங்குகள், பனி விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

பின்புற கூரையில் கருப்பு வண்ண ஸ்பாய்லர் மற்றும் எல்இடி பிரேக் லைட்டுகள் மற்ரும் டைட்டானியம் எஸ் வேரியண்ட்டுக்கான பட்டையும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட்டில் கருப்பு வண்ண இன்டீரியருடன் காட்சி தருகிறது. கதவுகள், டேஷ்போர்டு, சென்டர் கன்ச்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆரஞ்ச் வண்ண பட்டைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் எலக்ட்ரிக்கல் சன்ரூஃப், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்க்-3 சாஃப்ட்வேர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிந்றன. இரட்டை குடுவை அமைப்புடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்த் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் - ஸ்பை படங்கள்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் இந்த புதிய டைட்டானியம் எஸ் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போதைய டாப் வேரியண்ட்டைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Images: Team BHP

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 10:52 [IST]
English summary
Ford India is all set to launch a new variant of their EcoSport model in India. The new variant, the Titanium S, will receive all the features of the top-end EcoSport model, with the addition of a sunroof and a six-speed manual gearbox.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+