மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் மாடல் வருகை விபரம்!!
வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்காத வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது MPV ரக வாகனமான மஹிந்திரா மராஸ்ஸோ காரை அண்மையில் களமிறக்கியது. இதன் ஆரம்ப விலை ரூ.9 .99 லட்சமாகும்.
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் மாடலின் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்கள், எதிர்பார்க்கும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்காத வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது MPV ரக வாகனமான மஹிந்திரா மராஸ்ஸோ காரை அண்மையில் களமிறக்கியது. இதன் ஆரம்ப விலை ரூ.9 .99 லட்சமாகும் . இதன் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலின் விலை 13 . 90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மஹிந்திரா மராஸ்ஸோ முற்றிலும் தனித்துவமான தொழில்நுட்பங்கள் மென்பொருளில் செறிவடைந்து காணப்படுகிறது. இதே வாகனத்தின் பெட்ரோல் என்ஜின் வகையறா வருகின்ற 2020 இல் வெளிவரும் எனவும் இதன் கோட்பாடுகள் BS6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கார் தற்பொழுது வெறும் டீசல் என்ஜின் வகையில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இதன் என்ஜின் 1 .5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்டு செயல் திறன் அளிக்க வல்லது. மேலும் இது 121BHP & 300NM டார்க் கொண்டு சீரும் வல்லமை படைத்துள்ளது. இந்த என்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ்பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இந்த வாகனத்தின் அறிமுக நாளன்று , மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள், மராஸ்ஸோ காருக்கான பெட்ரோல் என்ஜின் வடிவமைப்பில் இறுதி நிலையை அடைந்து விட்டோம் என்றனர். 2020ல் இவ்வாகனம் வெளிவரும் என்ற அவர்களின் கூற்று வாடிக்கையாளர்களை சற்று ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் கோயங்கோ இந்த பெட்ரோல் வாகனத்தை பற்றி கூறுகையில் , வாகனம் வெளிவந்த பின்னர் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், BS6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட படி செதுக்கப்படுவதால் தான் இந்த காலதாமதம் என கூறினார்.

மேலும் இந்த மாசு உமிழ்வு கட்டுப்பட்டு அரசாங்கத்தால் 2020 இல் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்பது மற்றுமோர் காரணம். இந்த கட்டுப்பாடுகள் வெளியான விரைவில் இந்த வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது BS4 தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும் பெட்ரோல் வாகனத்தை வெளியிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல , இதில் பெரிய பொருட்செலவும் இல்லை என்பது உண்மை. வெளியிட்ட கொஞ்ச காலத்தில் மறுபடியும் இதனை BS6 தொழில்நுட்பத்திற்கு மாற்றி அதில் ஆகும் செலவுகளை குறைக்கவே நேரடியாக BS6 தொழில்நுட்பத்திற்கு தாவ இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மராஸ்ஸோ பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் இன் அளவுக்கு திறனை பெற்றிருக்கும். இதன் செயல் திறன் 120BHP ஐ எட்டும் என கிசுகிசுப்புகள் கசிந்துள்ளன. மேலும் அடிக்கோடிடப்பவேண்டிய விசியம் ஒன்றுள்ளது, அது! தற்பொழுது வெளியாகியுள்ள டீசல் என்ஜினானது முற்றிலும் BS4 மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டவை.

இனி வரும் காலங்களில் அரசாங்க ஆணைக்கு இணங்க இதனை அடுத்த தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மாற்றியமைக்கும் கட்டாயம் அந்நிறுவனத்திற்கு உள்ளது. ARAI எனப்படும் ஆட்டோமொபைல் ரிசெர்ச் அஸோஸியேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் கூற்றுப்படி இது லிட்டருக்கு 17 .8 கிமீ மைலேஜ் வழங்க வல்லதாய் அமையும் .

தற்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் போதுமான திருப்திநிலையில் இருந்தாலும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை எதிர் காலத்தில் இதே வாகனத்தில் கொணர அந்நிறுவனம் திட்டம் தீட்டி உள்ளது. இந்த மராஸ்ஸோ ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வாகனமும் 2020 இல் தான் வரும் என்பது ஏமாற்றம் தரும் விஷயம்.

இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் பற்றி நோக்குவோம். ஏழு இன்ச் தொடு திரை மென்பொருளில் ஆக்கப்பட்ட தகவல் பலகை அடுத்த யுக வாகனமாக நிலைநிறுத்துகிறது. மேலும் கூரையில் பதிக்கப்பட்ட குளிர் காற்று பாதைகள் வாகனத்தை சொகுசின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

இந்த வித்யாசமான AC வென்டிலேஷன் அமையப்பெற்ற வாகனம் இதுவே. இதன் கேபின் இரண்டடுக்கு க்ளஸ்டர் போர்டினால் மேம்படுத்த பட்டுள்ளது. மூன்று ஸ்போக் ஸ்டேரிங் வீல் மற்றும் ஹாண்ட்பிரேக் லீவர் வாகனத்தை விமானம் போல் காட்சியளிக்க செய்கிறது.
பாதுகாப்பு அம்சங்களை நோக்குகையில் ஏற்கனவே தேவையான அளவு அலசப்பட்ட பொதுவான இரண்டு காற்று பைகள் , நான்கு வீலையும் நறுக்கென்று நிறுத்த டிஸ்க் பிரேக்குகள் , ABS, குழந்தைகள் அமர ISOFIX இருக்கைகள், சென்சார்களால் பாதுகாக்க பட்ட டோர் லாக்குகள் போன்றவை திருப்திகரம். விளிம்பு விளக்குகள், பார்க்கிங் சென்சார்கள் கேமெராக்கள் போன்றவை எல்லா வாகனமும் போல அமையப்பெற்றுள்ளது. இதன் முக்கியமான சிறப்பம்சம் ஒன்றை தனிப்பட்டு கூறியாக வேண்டும் ஆபத்து காலத்தில் தானாகவே பிறரை உதவிக்கு அழைக்கும் எமெர்ஜெண்சி கால் தொழில்நுட்பமே அது.
More from DriveSpark
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு இடையேயான ஓப்பீட்டை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








