புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன்

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமைப்பு, கண்கள் போன்ற ஹெட்லைட் டிசைன், வலிமையான உடல் அமைப்பு, சுறா வால்பகுதி போன்ற டெயில் லைட் க்ளஸ்ட்டர் என பல இடங்களில் சுறா மீன் உடல் அமைப்பை பிரதிபலிக்கும் அம்சங்கள் இருக்கின்றன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள், பம்பரில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்டவை கவர்ச்சியை அளிக்கின்றன. பக்க்வாட்டில் வலிமையான உடல் அமைப்பை பெற்றிருக்கும் மராஸ்ஸோவிற்கு அழகு சேர்ப்பது 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள்.

அதேபோன்று, டி பில்லரின் வடிவமைப்பும் வசீகரிக்கிறது. காரின் பிரம்மாண்டத்துக்கு ஏற்றாற்போல் டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர், டெயில் லைட்டுகளுக்கு இடையிலான க்ரோம் சட்டம் போன்றவையும் இந்த காரின் முக்கிய டிசைன் அம்சங்கள்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

இன்னோவா க்ரிஸ்ட்டா - டிசைன்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டிசைன் வாடிக்கையாளர்களால் போற்றப்படும் ஒன்று என்பது தெரிந்த விஷயம். மிக பிரம்மாண்டமான உடல் தோற்றம், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட உடல் அமைப்பு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாடிக்கையாளர்கள் மொய்ப்பதற்கு முக்கிய காரணம். முகப்பில் இரண்டு க்ரோம் பட்டைகளுடன் கூடிய பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, அசத்தலான ஹெட்லைட் டிசைன், வலிமையான பானட் அமைப்பு என மிக மிக வசீகரமாக இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரத்தை மேலும் கூட்டுகின்றன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பக்கவாட்டு டிசைனும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. 17 அங்குல அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், வலிமையான பாடி லைன், பெரிய வீல் ஆர்ச்சுகள் என கம்பீரமாக இருக்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர், ரூஃப் ஸ்பாய்லர், மிக நேர்த்தியான பம்பர் அமைப்பு பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது. டிசைனில் இன்னோவா க்ரிஸ்ட்டாவை மிஞ்ச இன்னொாரு இன்னோவாதான் பிறந்து வரவேண்டும். எனவே, டிசைனில் இன்னோவாதான் சிறந்ததாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மஹிந்திரா மராஸ்ஸோ - இன்டீரியர்

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இன்டீரியர் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இரட்டை வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகள், கதவு, உட்புற மேற்கூரை, பாதி டேஷ்போர்டு வரை க்ரீம் வண்ணமும், டேஷ்போர்டின் மேற்புறம் கருப்பு வண்ண பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறை சொல்ல முடியாத அளவுக்கு டேஷ்போர்டு சிறப்பாகவே இருக்கிறது. டேஷ்போர்டு வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக சற்றே சரிந்து செல்லும் விதத்தில் இருக்கிறது. இது இன்னோவா க்ரிஸ்ட்டா டேஷ்போர்டின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - இன்டீரியர்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இன்டீரியர் மஹிந்திரா மராஸ்ஸோ காரைவிட மிக மிக பிரிமியமாக இருக்கிறது. பழுப்பு மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு வடிவமைப்பிலேயே வாடிக்கையாளர்களை சொக்க வைக்கிறது. வலது பக்கத்திலிருந்து இடதுபுறமாக சரிவாக அமைக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு பிற மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபடுவதுடன் தனித்துவமானதாக இருக்கிறது.

டேஷ்போர்டை விட்டு சற்று விலகி அமைக்கப்பட்ட ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கவர்கிறது. அதற்கு கீழாக ஏசி கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மஹிந்திரா மராஸ்ஸோ - வசதிகள்

இரண்டு கார்களின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டுகளையே இந்த ஒப்பீட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி, புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். இளஞ்சிவப்பு வண்ண பின்னணியுடன் இன்ஸ்ட்ரூமெனட்் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு டயல்களுக்கு நடுவில் காரின் இயக்கத்தை பற்றிய தகவல்களை தரும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் நெடுஞ்சாலை பயணத்தில் ஓட்டுனரின் கால்களுக்கு ஓய்வு தரும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கடைசி வரிசை இருக்கை வரை ஏசி குளிர்ச்சி பரவும் விதத்திலான புதிய சர்ரவுண்ட் கூல் ரூஃப் ஏசி, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்பட அதிக ஸ்டோரேஜ் வசதிகளும் உள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - வசதிகள்

டொயோட்டா இன்னோவா காரில் ஃப்ளோட்டிங் திரை அமைப்புடைய 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கின்றது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும்.

முப்பரிமாண மீட்டர் கன்சோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரூஃப் ஏசி வென்ட்டுகள் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதன் உயர்தர இருக்கைகள் பயணங்களை சொகுசாகவும், நிறைவானதாகவும் மாற்றும். 22 விதமான ஸ்டோரேஜ் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பாட்டில் மற்றும் இதர பொருட்களை வைப்பதற்கான வசதிகள் உள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

இடவசதி

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் வீல்பேஸ் அதிகம். இருப்பினும், இடவசதியில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கையின் இடவசதி சிறப்பாக இருப்பது இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெரும் பலம்.

அதேநேரத்தில், மற்றொரு போட்டியாளரான மாருதி எர்டிகாவைவிட மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் மூன்றாவது வரிசை இருக்கை சற்றே கூடுதல் இடவசதியை பெற்றிருக்கிறது என்பதுதான் ப்ளஸ் பாயிண்ட்டாக கூற முடியும். இரண்டு கார்களுமே 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இரு கார்களின் 7 சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் இருக்கின்றன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

பூட்ரூம் கொள்திறன்

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 190 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால் 640 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெறலாம். இரண்டாவது வரிசையை இருக்கையை மடக்கினாலும் அதனை தளத்துடன் சரியாக மடிக்க இயலாது என்பது பெரும் குறை. அதேநேரத்தில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 300 லிட்டர் கொள்திறன் இடவசதி உள்ளது. இருக்கைகளை மடக்கும்போது ஏராளமான இடவசதியை பெற முடியும்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மஹிந்திரா மராஸ்ஸோ எஞ்சின்

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எஞ்சின்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், இருக்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அடுத்து, மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு போட்டியாக கருதப்படும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 172 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

மைலேஜ்

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் சிக்கனத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ முன்னிலை பெறுகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

பாதுகாப்பு அம்சங்கள்

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் டாப் வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் 2 ஏர்பேக்குகள் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. டொயோட்டா இன்னோவா காரின் பேஸ் மாடலில் 3 ஏர்பேக்குகளும், டாப் வேரியண்ட்டில் 7 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

விலை

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.14.32 லட்சம் முதல் ரூ.22.60 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை மிக பெரிய வித்தியாசத்தை பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

7 சீட்டர் எம்பிவி மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் மாருதி எர்டிகா பட்ஜெட் அடிப்படையில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. பராமரிப்பு செலவுகளும் குறைவு என்பதுடன் மாருதி கார் நிறுவனத்தின் சிறந்த சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள் வலு சேர்க்கும் அம்சங்கள்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எல்லா விதத்திலும் சிறப்பாக இருந்தாலும் விலை எகிடுதகிடாக இருப்பது பலருக்கு எட்டாக் கனியாக இருக்கிறது. மாருதி எர்டிகாவை பார்த்து சலித்து போய் புதிய மாடலை எதிர்நோக்குகிறவர்களுக்கு, கூடுதல் இடவசதி மற்றும் சரியான பட்ஜெட்டில் எம்பிவி கார் மாடலை வாங்க விரும்புவோருக்கு மஹிந்திரா மராஸ்ஸோ சிறந்த தேர்வாக அமையும். கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க அம்சங்களை பெற்றிருக்கிறது மராஸ்ஸோ.

பட்ஜெட் பிரச்னை இல்லை என்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை தேர்வு செய்துவிடலாம். நம்பர்-1 எம்பிவி சாய்ஸ் என்றால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

புதிய மாருதி எர்டிகா

வடிவமைப்பு, தொழில்நுட்பம், இடவசதியில் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி எர்டிகா கார் விரைவில் வர இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா வந்தவுடன்தான் போட்டியே ஆரம்பமாக இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா நிச்சயம் மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Planning to buy the new Mahindra Marazzo and confused between the Marazzo and the Toyota Innova Crysta? We bring you the detailed comparison between the Mahindra Marazzo and the Toyota Innova Crysta on design, specifications, features, mileage and price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X