வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேகன் ஆர் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை மாருதி சுஸூகி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

By Arun

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேகன் ஆர் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை மாருதி சுஸூகி நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

'மூவ் மொபிலிட்டி' (MOVE mobility summit) மாநாடு, புது டெல்லியில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், சுஸூகி மோட்டார் கார்ப்ரேஷன் சேர்மன் ஒசாமு சுஸூகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை லான்ச் செய்வது தொடர்பான மாருதி சுஸூகி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை ஒசாமு சுஸூகி வெளியிட்டார். அத்துடன் ஆல் நியூ ஜென்ரேஷன் வேகன் ஆர் எலக்ட்ரிக் காரையும், மாருதி சுஸூகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

வேகன் ஆர் காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்தான், இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் லான்ச் செய்யவுள்ள முதல் எலக்ட்ரிக் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. financialexpress வெளியிட்டுள்ள தகவலின் படி, 2020ம் ஆண்டு லான்ச் ஆகவுள்ள வேகன் ஆர் எலக்ட்ரிக் வெர்ஷனைதான் மாருதி சுஸூகி நிறுவனம் இன்று காட்சிக்கு வைத்திருந்தது.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரானது, மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரபலமான HEARTECT பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பு குறைவு என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வேகன் ஆர் எலக்ட்ரிக் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவுள்ளன.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

பாதசாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் Pedestrian Protection தொழில்நுட்பம், மாருதி சுஸூகி வேகன் ஆர் எலக்ட்ரிக் காரில் இடம்பெறவுள்ளது. ஆனால் வேகன் ஆர் எலக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்களை, மாருதி சுஸூகி நிறுவனம் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

இதுகுறித்து மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயூகவா கூறுகையில், ''2020ம் ஆண்டில், இந்தியாவிற்கு எலக்ட்ரிக் காரை கொண்டு வர மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது.

வேகன் ஆர் எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது மாருதி சுஸூகி.. கூடுதல் தகவல்கள் வெளியானது..

வெவ்வேறு நிலப்பரப்பு மற்றும் கால நிலைகளில் காரை சோதனை செய்கிறோம். இது எங்களுக்கு உதவி செய்யும். இந்த சோதனைகள் மூலமாக, எங்களின் எலக்ட்ரிக் கார், எங்களின் மதிப்புமிகுந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.

மாருதி சுஸூகி நிறுவனமானது 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் 15 லட்சம் எலக்ட்ரிக் கார்களையும், 35 லட்சம் பெட்ரோல்/டீசல் கார்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாருதி சுஸூகி நிறுவனம் எடுத்து வருகிறது.

Most Read Articles

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடுமையான சவால் அளிக்கும் வகையில், சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களில் எது சிறந்தது? என்ற விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English summary
Maruti Suzuki WagonR Electric Car Showcased at MOVE Mobility Summit. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X